
நன்றி குங்குமம் தோழி
இயற்கையாக கிடைக்கும் அன்னாசி பழத்தில் உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துக்கள் உள்ளன. அன்னாசி பழம் எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு பழம்தான் என்றாலும் பெரும்பாலான மக்கள் அன்னாசி பழத்தினை விரும்புவதில்லை. ஆனால், அன்னாசி பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள் யாருக்கும் தெரிவதில்லை.
*வைட்டமின் ஏ, பி, சி சத்துகள் நிறைந்துள்ள இந்த அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை குறையும். முகம் பொலிவு பெறும்.
*நார்ச்சத்து, புரதச்சத்து, இரும்புச் சத்துகளை கொண்ட அன்னாசி பழம் ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
*அன்னாசி பழம் மற்றும் தேன் சேர்த்து ஜூஸ் செய்து தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட்டால் ஒரு பக்க தலைவலி, இரு பக்க தலைவலி, எல்லாவித கண் நோய்கள், எல்லாவித காது நோய்கள், பல் நோய்கள், தொண்டை சம்பந்தமான நோய்கள், வாய்ப்புண், மூளைக்கோளாறு, ஞாபக சக்தி குறைவு போன்றவை குணமடையும்.
*மஞ்சள் காமாலை உள்ளவர்கள் அன்னாசி பழச் சாற்றை சாப்பிட்டால் சீக்கிரம் குணமடைவார்கள். ரத்தம் இழந்து பலவீனமாக இருப்பவர்களுக்கு அன்னாசி பழச்சாறு சிறந்த டானிக்காகும்.
*பித்தத்தால் ஏற்படும் காலை வாந்தி, கிறுகிறுப்பு, பசி மந்தம் நீங்க அன்னாசி ஒரு சிறந்த மருந்தாகும்.
*அன்னாசி பழம் ரத்தத்தை சுத்தம் செய்வதில், ஜீரண உறுப்புகளை வலுப்படுத்துவதில், மலக்குடலை சுத்தப்படுத்துவதில் சிறந்தது.
*தொடர்ந்து நாற்பது நாள் இப்பழத்தை உண்டால் தேகத்தில் ஆரோக்கியமும், பளபளப்பும் ஏற்படும். உடலில் ஏற்படும் வலியை தீர்க்கும் ஆற்றல் உடைய அன்னாசி பழம் பித்தத்தை குறைக்கும் தன்மை உடையது. இதயம் தொடர்பான நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
*கண் பார்வைக் குறைபாடு ஏற்படாமல் தடுக்கிறது. இவ்வளவு மருத்துவ குணங்களை தன்னுள்ளே அடக்கி வைத்துள்ளது அன்னாசி பழம்.
தொகுப்பு: கவிதா சரவணன், ஸ்ரீ ரங்கம்.
The post வாசகர் பகுதி – இனிப்பான மருந்து அன்னாசி! appeared first on Dinakaran.
