×

ரிசர்வ் வங்கியின் புதிய விதியால் தனிநபர் கடன் பெற சிக்கல்?

மும்பை: வராக்கடன் அதிகரிப்பதை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி எடுத்து வருகிறது. பிணையில்லாமல் வழங்கப்படும் தனிநபர் கடன்கள் சில வசூலிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, வங்கிகள் இத்தகைய கடன்களை வழங்கும்போது வசூலிப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்பதால் இடர்பாட்டு நிதியை 25 சதவீதம் உயர்த்தி, 125 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. அதாவது, வங்கிகள் தனிநபர் கடன்கள் வழங்கும்போது, அவற்றை வசூலிக்க முடியாத நிலை ஏற்பட்டால் சமாளிக்க ஒதுக்கி வைக்கும் தொகையை 25 சதவீதம் அதிகரிக்க வேண்டும். இந்த புதிய விதியால் வங்கியிடம் நிதி இருப்பு குறைவதால், கடன் வழங்குவது குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தனிநபர் கடன்கள் வழங்கும்போது, அவர்கள் பிற வங்கிகளில் பெற்ற கடன் நிலுவையையும் கருத்தில் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. வீடு, கல்வி, வாகனத்துக்காக வாங்கப்படும் கடன்கள், நகை அடமான கடன்களுக்கு இது பொருந்தாது எனவும் ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.

The post ரிசர்வ் வங்கியின் புதிய விதியால் தனிநபர் கடன் பெற சிக்கல்? appeared first on Dinakaran.

Tags : Reserve Bank ,MUMBAI ,RBI ,Dinakaran ,
× RELATED ரூ.2000 நோட்டுகளில், 97.87% நோட்டுகள் வங்கி...