×
Saravana Stores

தமிழ்நாட்டில் 36,000 ரேசன் கடைகளில் கருவிழி மூலம் அடையாளம் காணும் ஐ ரைஸ் கருவிகள் பொருத்தப்பட உள்ளது: அமைச்சர் சக்கரபாணி

தஞ்சை: 2 மாதத்தில் தமிழ்நாட்டில் 36,000 ரேசன் கடைகளில் கருவிழி மூலம் அடையாளம் காணும் ஐ ரைஸ் கருவிகள் பொருத்தப்பட உள்ளது. ரேஷன் கடைகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுப்பதற்கு என குடும்ப அட்டைதாரர்களுக்கு பயோமெட்ரிக் கருவி மூலம் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் கார்ட்களில் பெயர் உள்ள ஒருவர் கடைக்கு சென்று கைரேகை வைத்தால் மட்டுமே பொருட்கள் வாங்கப்படும். .

ஆனால் சில சமயங்களில் ஏற்படும் பயோமெட்ரிக் இயந்திர கோளாறு காரணமாக பொருட்கள் விநியோம் செய்வதில் சிக்கலை ஏற்பட்டு வரும் காரணத்தால், மற்ற மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் கருவிழி பதிவு முறை கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னையில் திருவல்லிக்கேணி ரேஷன் கடைகளில் முதல் முறையாக கருவிழி அடையாள முறை மூலம் பொருள்கள் விநியோகம் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் 2 மாதத்தில் தமிழ்நாட்டில் 36,000 ரேசன் கடைகளில் கருவிழி மூலம் அடையாளம் காணும் ஐ ரைஸ் கருவிகள் பொருத்தப்பட உள்ளது என உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். நியாய விலை கடைகளில் பொதுமக்களுக்கு பொட்டலங்கள் மூலம் உணவு பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 4 லட்சம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகளை சேமிக்க ரூ.400 கோடி நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

The post தமிழ்நாட்டில் 36,000 ரேசன் கடைகளில் கருவிழி மூலம் அடையாளம் காணும் ஐ ரைஸ் கருவிகள் பொருத்தப்பட உள்ளது: அமைச்சர் சக்கரபாணி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister Chakrapani Thanjavur ,Minister Chakrapani ,
× RELATED காவல்துறையில் பணிக்கு...