×

தமிழில் பெயர் பலகை இல்லாத கடை உரிமம் ரத்து செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: கர்நாடகத்தில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளில் 60% பரப்பளவு கன்னடத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று அம்மாநிலத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதை பிப்ரவரி 28க்குள் நிறைவேற்றாத கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ள பெங்களூரு மாநகராட்சியின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது, பாராட்டத்தக்கது.

பெங்களூருவுடன் தமிழகத்தையும், சென்னை மாநகரத்தையும் ஒப்பிடும் போது நிலைமை கண்ணீரை வரவழைக்கும் வகையில் தான் உள்ளது. சென்னையில் ஆங்கிலத்தில் பெயர்ப்பலகைகள் மின்னுகின்றன. தமிழ்நாட்டின் எந்த மூலைக்கு சென்றாலும் அரைகுறை ஆங்கிலத்தில் தான் காட்சியளிக்கின்றன. மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின்படி அபராதம் ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் என்று கடந்த மார்ச் மாதம் தமிழக அரசு அறிவித்தது.

ஆனால், 9 மாதங்களாகியும் அரசாணையை பிறப்பிக்கவில்லை. எனவே, பெங்களூரு மாநகராட்சியை போன்று தமிழக அரசும் இதில் கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். பெயர்ப்பலகைகளில் 50 சதவீத தமிழ் இல்லாத கடைகளின் உரிமத்தை ரத்து செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை உலகத்தாய்மொழி நாளான பிப்.21க்குள் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

The post தமிழில் பெயர் பலகை இல்லாத கடை உரிமம் ரத்து செய்ய ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : RAMADAS ,Chennai ,Palamaka ,Karnataka ,Dinakaran ,
× RELATED நிலத்தடி நீர் பாசனத்திற்கு உதவும்...