×

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு..!!

சென்னை: மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 2025 ஜூன் 19 அன்று நடைபெறவிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் நான்கு இடங்களில், மூன்று இடங்களுக்கு தி.மு.க. வேட்பாளர்களும், மற்றுமுள்ள ஒரு இடத்திற்கு ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு இடம் ஒதுக்கப்படுகிறது. திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், திமுக கூட்டணி சார்பில் 4 வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

தி.மு.க. வேட்பாளர்களாக
1. பி.வில்சன் பி.எஸ்சி., பி.எல்.,
2. எஸ்.ஆர்.சிவலிங்கம்
3. ரொக்கையா மாலிக் (என்கிற) கவிஞர் சல்மா
4. கமல்ஹாசன் (மக்கள் நீதி மய்யம்) ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்படுகிறது.

The post மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,President of the Association ,K. Stalin ,Dravitha Development Corporation ,M. K. ,Dinakaran ,
× RELATED செவிலியர்கள் கோரிக்கைகளுக்கு...