×

ரஜினியுடன் ஆஸ்திரேலிய தூதர் சந்திப்பு

சென்னை: ரஜினிகாந்த்தை மரியாதை நிமித்தமாக வெளிநாட்டு தூதர்கள், அமைச்சர்கள் சந்தித்து பேசுவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. ஏற்கெனவே சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் தூதர்கள் ரஜினியை சந்தித்து தங்கள் நாட்டுக்கு விருந்தினராக வருமாறு அழைத்துள்ளனர். சமீபத்தில் இலங்கை தூதர் ரஜினியை சந்தித்தார். இந்நிலையில் ரஜினியை இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய துணை தூதர் பேர்ரி ஓ ஃபேரல் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு 40 நிமிடங்கள் நடந்துள்ளது.

இந்த சந்திப்பு குறித்து ஆஸ்திரேலிய தூதர் தனது டிவிட்டரில் ‘‘நாடுகளுக்கு இடையில் உள்ள மக்களை ஒன்றுக்கொன்று இணைப்பதிலும், கலாச்சாரத்தை வளர்ப்பதிலும் சினிமாவுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. அவரது அடுத்த படமான ‘ஜெயிலர்’ வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்தேன்’’. என்று எழுதியிருக்கிறார். மேலும் ரஜினியுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, ‘வந்துட்டேனு சொல்லு, தலைவர பாக்க வந்துட்டேனு சொல்லு’ என்ற ரஜினியின் வசனத்தை குறிப்பிட்டுள்ளார்.

The post ரஜினியுடன் ஆஸ்திரேலிய தூதர் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Rajinikanth ,Chennai ,Singapore ,Malaysia ,Japan ,Dinakaran ,
× RELATED ‘கல்கி’ படம் இந்திய சினிமாவை அடுத்த...