×

ராஜஸ்தான் மாநிலத்திலும் ஆர்எஸ்எஸ்சில் அரசு ஊழியர் பங்கேற்பதற்கான தடை நீக்கம்

ஜெய்ப்பூர்: கடந்த 1966ம் ஆண்டு நவம்பரில் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியின் ஆட்சியின்போது ஆர்எஸ்எஸ் நடவடிக்கைகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதிய துறை அமைச்சகம் அரசு ஊழியர்களுக்கு விதிக்கப்பட்ட இந்த தடையை கடந்த மாதம் நீக்கி உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து அரியானா, இமாச்சலப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், சட்டீஸ்கர் உட்பட பல்வேறு மாநில அரசுகள் அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணையும் கட்டுப்பாடுகளை நீக்கின. இந்நிலையில் ராஜஸ்தானில் பாஜ அரசானது ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்பதற்காக விதிக்கப்பட்டு இருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

The post ராஜஸ்தான் மாநிலத்திலும் ஆர்எஸ்எஸ்சில் அரசு ஊழியர் பங்கேற்பதற்கான தடை நீக்கம் appeared first on Dinakaran.

Tags : RSS ,Rajasthan ,Jaipur ,Indira Gandhi ,Ministry of Personnel, Public Grievances and Pensions ,Dinakaran ,
× RELATED ராஜஸ்தானில் ஆழ்த்துளை கிணற்றில்...