×

ராஜஸ்தான் அமைச்சர்கள் 2 பேர் விபத்தில் காயம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் அமைச்சர்கள் 2 பேர் நேற்று நடந்த விபத்தில் காயம் அடைந்தனர். ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் அமைச்சரவையில் இடம் பெற்று இருப்பவர்கள் லால் சந்த் கட்டாரியா மற்றும் முராரி மீனா. நேற்று இவர்கள் ஜோத்பூரில் இருந்து ஜெய்ப்பூருக்கு வந்து கொண்டு இருந்தனர். அவர்கள் 2 பேரும் ஒரே காரில் வந்தனர். சதார் பகுதியில் கார் வந்த போது எதிரே தவறான பாதையில் வந்த மற்றொரு கார் அமைச்சர்கள் வந்த கார் மீது மோதியது. இதில் 2 அமைச்சர்களும் காயம் அடைந்தனர். குறிப்பாக அமைச்சர் கட்டாரியாவின் காலில் ரத்தக்காயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரு சிறுமியும் காயம் அடைந்தார்.

The post ராஜஸ்தான் அமைச்சர்கள் 2 பேர் விபத்தில் காயம் appeared first on Dinakaran.

Tags : Rajasthan ,Jaipur ,Chief Minister ,Ashok Khelat ,Dinakaran ,
× RELATED ஒருவர் இந்துவா? இல்லையா? என்பதை அறிய...