×

மழைக்காலம் நெருங்கி விட்டதால் தொப்பிக்குடைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரம்

பாலக்காடு : கேரளாவில் வரும் ஜூன்மாதம் தென்மேற்குப் பருவ மழை தொடங்கி விடும் நிலை உள்ளது. ஆண்டுந்தோறும் மே மாதம் இறுதியில் தென்மேற்குப் பருவமழை கேரளாவில் ஆரம்பித்து வழக்கமாகும். இந்தாண்டு மழைக்காலம் விரைவில் துவங்க உள்ள நிலையில் வயல்களில் வேலை செய்கின்றவர்கள், மீனவர்கள் ஆகியோர் பயன்படுத்தக்கூடிய பாரம்பரிய பனையோலை மற்றும் மூங்கிலாலான தொப்பிக் குடைகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

பாலக்காடு மாவட்டம் ஆனக்கரை பகுதிகளில் இக்குடைகள் தயாரிக்கும் பணி நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. பழங்காலங்களில் கிராமங்களில் இந்த தொப்பிக் குடைகள் தயாரிப்பவர்கள் பலர் இருந்தனர். தற்போது இவைகளை தயாரிப்பதில் ஆர்வம் காட்டாமலும், இந்த தொழிலில் நலிவு ஏற்பட்டதாலும் பயன்பாடின்றி போய்விட்டது. இந்த தொப்பிக்குடைகள் ஆலப்புழா, எர்ணாகுளம், ஆலுவா, பொன்னாணி, சாவக்காடு, கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களில் படகுகளில் மீன்ப்பிடிக்கும் தொழிலாளர்களும் இவற்றை பயன்படுத்தி வந்தனர். தற்போது இது போன்று பிளாஸ்டிக் தொப்பிகள் வந்துவிட்டன.

இதனால் இவற்றிற்கு மவுசு குறைந்தவிட்டது. இந்த தொழில் செய்தவர்கள் குறைந்த கூலி மட்டுமே கிடைக்கிறது என்பதால் கட்டுமானப் பணிகளுக்கும், மற்ற தொழில்களுக்கும் சென்றுவிட்டனர். தற்போது பாலக்காடு மாவட்டம் திருத்தாலாவை அடுத்த ஆனக்கரையில் மழைக்கால தொப்பி தயாரிப்பவர்கள் சிலர் பாரம்பரியமாக இவற்றை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். மீனவர்கள், நாற்று நடவு தொழிலாளர்கள் வீட்டில் இந்த தொப்பி குடைகள் காலம் காலமாக இடம் பிடித்து வருகின்றன. கும்பிடி, திருத்தாலா, சாலிச்சேரி ஆகிய இடங்களில் இந்த தொப்பி குடைகள் ரூ.700 வரை விற்பனையாகின்றன.

The post மழைக்காலம் நெருங்கி விட்டதால் தொப்பிக்குடைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thrimpuram ,Dinakaran ,
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...