×

வெப்ப சலனத்தால் மழை நீடிக்கும்; 3 மாவட்டங்களில் 106 டிகிரி வெயில்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் கத்திரி வெயில் இன்னும் ஒருசில நாட்களில் முடிய உள்ள நிலையில் வெயிலின் தாக்கம் சில இடங்களில் குறைந்தும், சில இடங்களில் அதிகரித்தும் காணப்படுகிறது. இதனால் ஏற்பட்டுள்ள வெப்ப சலனம் காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று கனமழை பெய்தது. இதற்கிடையே, சென்னை, கன்னியாகுமரி, கரூர், மதுரை, திருச்சி மாவட்டங்களில் இயல்பைவிட கூடுதலாக 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக திருத்தணி, சென்னை, வேலூர் மாவட்டங்களில் நேற்று 106 டிகிரி வெயில் கொளுத்தியது.

மதுரை விமான நிலையம், பாளையங்கோட்டை, புதுச்சேரியில் 104 டிகிரியும், நாகப்பட்டினம், நாமக்கல், பரங்கிப்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் 102 டிகிரியும், கடலூர், ஈரோடு, கரூர், சேலம், திருப்பத்தூர், தூத்துக்குடி மாவட்டங்களில் 100 டிகிரியும் வெயில் நிலவியது. மேலும் வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும். இதே நிலை 30ம் தேதி வரை நீடிக்கும். சென்னை மற்றும் புறநகரில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

The post வெப்ப சலனத்தால் மழை நீடிக்கும்; 3 மாவட்டங்களில் 106 டிகிரி வெயில்: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Meteorological Inspection Center ,Chennai ,Tamil Nadu, Tamil Nadu ,Meteorological Research Center ,
× RELATED சென்னை புதுப்பேட்டையில் ஆன்லைன்...