×

தொடர் மழை காரணமாக தமிழ்நாட்டில் இன்று(ஜன.08) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

சென்னை: தொடர் மழை காரணமாக கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று(ஜன.08) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, அரியலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(ஜன.08) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தென் தமிழக உள் மாவட்டங்களில் மிகத் தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் நேற்று பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. உள் மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது.

குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், மதுராந்தகம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, நெய்வேலி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், ராஜாபாளையம், போடிநாயக்கனூர் ஆகிய இடங்களில் நல்ல மழை பெய்தது.

திருநெல்வேலி, நெய்வேலி, உளுந்தூர்பேட்டை, விருத்தாசலம், ரூ.முஷ்ணம், பெண்ணாடம் ஆகிய இடங்களில் கனமழை பெய்தது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்தது.

இந்நிலையில், தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலை கொண்டுள்ளது. இந்த இரண்டு நிகழ்வுகளின் காரணமாக இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.

மேலும் சென்னை வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்ததையொட்டி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்யும் வாய்ப்புள்ளதால் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொடர் மழை காரணமாக கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று(ஜன.08) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, அரியலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(ஜன.08) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மாவட்டங்களில் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். சென்னையில் இன்று (ஜன.08) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

The post தொடர் மழை காரணமாக தமிழ்நாட்டில் இன்று(ஜன.08) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Cuddalore ,Viluppuram ,Mayiladuthura ,Thiruvarur ,Tiruvannamalai ,Vellore ,Ranipetta ,Ariyalur ,Kallakurichi ,Chengalpattu ,Karaikal ,
× RELATED மணல் குவாரிகளை அரசு நடத்துவது போல...