×

ரயில்வே தண்டவாளங்கள் அமைத்தல், பராமரிப்பு பணிகளை தனியார் வசம் ஒப்படைக்க இந்திய ரயில்வே முடிவு!!

டெல்லி : ரயில்வே தண்டவாளங்கள் அமைக்கும் பணி மற்றும் பராமரிப்பு பணிகளை தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. டெல்லியில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய ரயில்வே வாரிய தலைவர் அணில் குமார் லஹோதி, இதனை தெரிவித்துள்ளார். இந்தியாவின் உட்கட்டமைப்பு வளர்ச்சியை வேகப்படுத்தும் பணியில் இந்திய ரயில்வேத்துறை இறங்கி உள்ளதாக அவர் கூறினார்.

இதன் ஒரு பகுதியாக தண்டவாளம் அமைத்தல், பராமரிப்பிற்கான இயந்திரங்களை கொள்முதல் செய்தல் போன்ற பாரம்பரிய முறைக்கு பதிலாக இந்த பணிகளை தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக அணில் குமார் தெரிவித்துள்ளார். தண்டவாளங்களை அமைக்கும் இயந்திரங்கள் 10 கோடி ரூபாய் முதல் 100 கோடி ரூபாய் வரை ஆவதாகவும் இதற்கு பெரும் நிதி தேவையாக உள்ளது என்றும் அணில் குமார் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்த பணிகளை அதற்கான இயந்திரங்கள் வைத்துள்ள ஒப்பந்ததாரர்களிடம் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அடுத்த 7 ஆண்டுகளில் 2000 விரிவுபடுத்தப்பட்ட தண்டவாளங்கள் அமைத்தல் மற்றும் அதற்கான பராமரிப்பு இயந்திரங்கள் தேவை என்றும் ரயில்வே வாரியத் தலைவர் அணில் குமார் சுட்டிக் காட்டியுள்ளார்.

The post ரயில்வே தண்டவாளங்கள் அமைத்தல், பராமரிப்பு பணிகளை தனியார் வசம் ஒப்படைக்க இந்திய ரயில்வே முடிவு!! appeared first on Dinakaran.

Tags : Indian Railways ,Delhi ,Dinakaran ,
× RELATED ரயில்கள் தடம் புரண்டதில் ரயில்வே உலக சாதனை:: மம்தா கேலி