×

ராகுல் காந்திக்கு கனிமொழி பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ராகுல் காந்திக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நமது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான உங்கள் தைரியம், தெளிவு மற்றும் அர்ப்பணிப்பு பலரை தொடர்ந்து ஊக்குவிக்கிறது. சமூகநீதி, சமத்துவம் மற்றும் மதச்சார்பின்மைக்கான உங்கள் போராட்டத்தில் நீங்கள் வலு பெறவேண்டும்,’ என்று பதிவிட்டுள்ளார்.

The post ராகுல் காந்திக்கு கனிமொழி பிறந்தநாள் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Kanimozhi ,Rahul Gandhi ,Chennai ,Lok Sabha ,DMK ,Deputy General Secretary ,X- ,Rahul Gandhi… ,Dinakaran ,
× RELATED அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும்: தஞ்சையில் டி.டி.வி. தினகரன் பேட்டி