×

உலகளவில் வெறிநாய்க்கடியால் பலியானவர்களில் 36% பேர் இந்தியர்: உலக சுகாதார அமைப்பு தகவல்

புதுடெல்லி: உலகளவில் வெறிநாய்க்கடியால் பலியானவர்களில் எண்ணிக்கை அடிப்படையில் 36% பேர் இந்தியர்களாக உள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. நாய்கள் கடிப்பதன் மூலம் ஏற்படும் ரேபிஸ் நோய் பாதிப்புக்குள்ளாகி இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், சரியான நேரத்தில் நாய்களுக்கு தடுப்பூசி போடாதது தான். ரேபிஸ் நோயைத் தடுப்பதற்கான ஒரே தீர்வு, நாய்களுக்கு தடுப்பூசி போடுவது தான் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ரேபிஸ் தொடர்பான உலகளாவிய இறப்புகளில் இந்தியாவில் மட்டும் 36 சதவீதம் அளவிற்கு இறப்புகள் ஏற்படுகிறது. இவ்விகாரம் தொடர்பாக நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் தலைமையிலான குழு நடத்திய ஆய்வில், மக்களிடையே சரியான விழிப்புணர்வு இல்லாததே, வெறிநாய்க்கடியால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிப்பதற்கு காரணம் என்று கண்டறிந்துள்ளது.

கடந்த 2015ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 20,847 பேர் ரேபிஸ் நோயால் உயிரிழந்துள்ளனர் என்றும், அடுத்த 6 ஆண்டுகளுக்குள் ரேபிஸ் நோயை முழுமையாக தடுப்பதற்கான செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

The post உலகளவில் வெறிநாய்க்கடியால் பலியானவர்களில் 36% பேர் இந்தியர்: உலக சுகாதார அமைப்பு தகவல் appeared first on Dinakaran.

Tags : World Health Organization ,New Delhi ,Dinakaran ,
× RELATED தீவிரவாதிகள் என்னை மனித வெடிகுண்டாக...