×

கல் குவாரி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் கல்குவாரிகளை பார்வையிட்டு பல்வேறு புகார்களை கூறி, குவாரிகளை முடக்க நினைக்கிறது என்று குற்றஞ்சாட்டி கல்குவாரி உரிமையாளர்கள் தங்களது உற்பத்தியை நிறுத்தி விட்டனர். இதனால், கட்டுமான தொழில் முழுமையாக நின்றுவிட்டது. அனைத்து குவாரிகளுக்கும் 30 வருடங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதியும், குவாரி அனுமதியும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில கோரிக்கைகளை கல் குவாரி உரிமையாளர்கள் அரசிடம் முன்வைத்துள்ளனர். எனவே கனிம வள,்சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள், கல் குவாரி உரிமையாளர்கள் சங்கத்திடம் பேசி, இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

The post கல் குவாரி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Edappadi ,Chennai ,AIADMK ,General Secretary ,Edappadi Palaniswami ,
× RELATED விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்...