×

புழல் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்தது அமலாக்கத்துறை

சென்னை: புழல் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்தது. அமைச்சர் செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. புழல் சிறையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக வாகனத்தில் அமலாக்கத்துறை அழைத்துச் செல்லபடுகிறார்.

சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த ஜூன் மாதம் கைது செய்தது. அப்போது ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக செந்தில் பாலாஜி மருத்துவமணையில் அனுமதிக்கபட்டார். மருத்துவ சிகிட்சைக்கு பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கபட்டார். இதனை தொடர்ந்து, நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கும்படி சென்னை முதன்மை அமர்வுவில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை இன்று விசாரித்த கோர்ட்டு, செந்தில் பாலாஜியை வரும் 12-ம் தேதி வரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கியது. இந்நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்தது. இதனை தொடர்ந்து புழல் சிறையில் இருந்து செந்தில்பாலாஜி அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து செந்தில்பாலாஜியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.

The post புழல் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்தது அமலாக்கத்துறை appeared first on Dinakaran.

Tags : minister ,senthil ballaji ,Chennai ,Senthil Balaji ,The Enforcement Department ,
× RELATED சிறு வணிக கட்டிடங்களுக்கு கட்டட முடிவு சான்று பெறுவதில் இருந்து விலக்கு