×

ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் தீவிரமடைகிறது?.. அணு ஆயுதங்களை பயன்படுத்த அதிபர் புதின் ஒப்புதல்

மாஸ்கோ: அணு ஆயுதங்களை பயன்படுத்த அதிபர் புதின் ஒப்புதல் அளித்துள்ளார். ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்க அதிபராக டிரம்ப் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் விவகாரம் தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான தடையை ஜோ பைடன் நீக்கியுள்ளார்.

அதன்படி அமெரிக்காவின் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்த அந்தாடு அனுமதி அளித்தது. இதனிடையே அமெரிக்காவின் முடிவு உக்ரைனுக்கு எதிரான போரை மேலும் தீவிரப்படுத்தும் என ரஷ்யா எச்சரித்திருந்தது. அமெரிக்காவின் அனுமதியைத் தொடர்ந்து அணுஆயுதம் குறித்த ஒப்புதலை ரஷ்ய அதிபர் புதின் புதுப்பித்திருக்கிறார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் புதுப்பிக்கப்பட்ட அணுசக்தி கோட்பாட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்தும் ஆணையில் ரஷ்ய அதிபர் புதின் கையெழுத்திட்டுள்ளார். அணுசக்தி இல்லாத நாடுகளுக்கு எதிராக அணுஆயுதங்களை பயன்படுத்த அனுமதிக்கும் ஆணையில் புதின் கையொப்பமிட்டுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலின் ஆயிரமாவது நாளில் கையொப்பம் இட்டுள்ளார்.

The post ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் தீவிரமடைகிறது?.. அணு ஆயுதங்களை பயன்படுத்த அதிபர் புதின் ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : Russia ,Ukraine ,Chancellor ,Mint ,Moscow ,Chancellor Mint ,Trump ,US ,Joe Biden ,Dinakaran ,
× RELATED உக்ரைன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை...