×

பப்பட் சப்ஜி

தேவையானவை:

மிளகு அப்பளம் – 2,
தயிர் – அரை கப்,
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்,
சீரகத்தூள், தனியாத்தூள் – தலா கால் டீஸ்பூன்,
கடுகு, சீரகம் – சிறிதளவு,
கரம்மசாலாத்தூள் – 2 சிட்டிகை,
மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்,
கொத்தமல்லி – சிறிதளவு,
எண்ணெய் – அரை டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தயிரைச் சேர்த்து மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், சீரகத்தூள், கரம்மசாலாத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் தாளித்து, தயிர் கலவையை சேர்க்கவும். அடுப்பை மெல்லிய தீயில் வைத்து 5 நிமிடம் கிளறவும். நான்காக நறுக்கிய மிளகு அப்பளத்தை சேர்க்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து, 3 நிமிடம் மெல்லிய தீயில் வைத்து அடுப்பை அணைக்கவும். கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

The post பப்பட் சப்ஜி appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED வயிறு நிறைய சாப்பிடறதை விட மனசு நிறைந்து சாப்பிடணும்!