×

பஞ்சாபில் குடை மிளகாய் கிலோ ரூ.1:வீதியில் கொட்டி போராடும் விவசாயிகள்

மானசா: பஞ்சாபில் சுமார் 3 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. இதில், 1,500 ஹெக்டேர் பரப்பளவில் குடைமிளகாய் பயிரிடப்படுகிறது. குடைமிளகாய் இந்த ஆண்டு அதிக மகசூல் கொடுத்ததால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. குடைமிளகாய் சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை விவசாயிகளுக்கு செலவாகிறது. ஆனால் அதற்கேற்ப லாபம் கிடைப்பதில்லை. இதனால், விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் அறுவடை செய்த குடை மிளகாய்களை மான்சா பகுதி விவசாயிகள் சாலையில் கொட்டி போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘குடை மிளகாய் கிலோ ரூ.1-க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். விளைபொருட்களுக்கான சரியான தொகை கிடைக்க வழிவகை செய்யப்படும் மாநில அரசு உறுதியளித்த நிலையில், தற்போது யாரும் எங்களை கண்டுகொள்ளவில்லை. அதனால் குடை மிளகாயை வீதியில் கொட்டி போராட்டம் நடத்துகிறோம்’ என்று ஆதங்கத்துடன் கூறினார்.

The post பஞ்சாபில் குடை மிளகாய் கிலோ ரூ.1:வீதியில் கொட்டி போராடும் விவசாயிகள் appeared first on Dinakaran.

Tags : Punjab ,Kudai ,Chilli ,Manasa ,Dinakaran ,
× RELATED பஞ்சாபில் சட்ட விரோத சுரங்க நிறுவனத்தில் ரூ.4 கோடி பறிமுதல்