×

4 நாட்கள் அரசு முறை பயணமாக பிரேசில் சென்றடைந்தார் பிரதமர் மோடி!

4 நாட்கள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி பிரேசில் சென்றடைந்தார். இன்றும் நாளையும் நடக்கும் 17வது பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். பிராந்திய அமைதி, பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி கருத்துகளை பகிரவுள்ளார். காலநிலை மாற்றம், செயற்கை நுண்ணறிவு பயன்பாடு, சுகாதாரம், பொருளாதாரம் குறித்து மோடி பேசவுள்ளார். பிரிக்ஸ் மாநாட்டின்போது பல்வேறு நாட்டு தலைவர்களுடன் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தையும் நடத்தவுள்ளார். முன்னதாக பிரேசில் அதிபருடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

 

The post 4 நாட்கள் அரசு முறை பயணமாக பிரேசில் சென்றடைந்தார் பிரதமர் மோடி! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Brazil ,Narendra Modi ,17th BRICS Conference ,Modi ,Dinakaran ,
× RELATED ஆஸ்கர் விருதுக்கு ஹோம்பவுண்ட் இந்தி படம் தேர்வு