×

70,000 பேருக்கு இன்று காணொலி வாயிலாக பணி நியமன ஆணைகளை வழங்குகிறார் பிரதமர் மோடி!

டெல்லி: ஒன்றிய அரசின் பல்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள மேலும் 70,000 பேருக்கு இன்று பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளது. பிரதமர் மோடி காணொலி வாயிலாக பணி நியமன ஆணைகளை வழங்குகிறார். அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக, நாடு முழுவதும் பத்து லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க வகை செய்யும் ‘ரோஜ்கர் மேளா’ திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி வைத்தார்.

தொடங்கி வைத்த அன்றைய தினமே முதல் கட்டமாக 75 ஆயிரத்து 226 பேருக்கு அரசு பணிக்கான ஆணைகளை அவர் வழங்கினார். அதன் பின்னர் மீண்டும் கடந்த நவம்பர் மாதம் 22ம் தேதி, 71,000 பேருக்கு இரண்டாம் கட்டமாக பணி நியமன ஆணைகளை வழங்கியிருந்தார். மூன்றாவது கட்டமாக கடந்த ஜனவரி மாதம் 20ம் தேதி 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்கினார். இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ், அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைப்புகளுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 70,000 பணியாளர்களுக்கு இன்று பிரதமர் மோடி பணி நியமன ஆணைகளை வழங்கி வருகிறார்.

இதற்காக நாடு முழுவதும் 45 இடங்களில் ‘ரோஜ்கர் மேளா’ நடைபெறுகிறது. இதில் ஒன்றிய அரசு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பணியாளர்கள் கலந்து கொள்கின்றனர். அவர்களுக்கு காணொலி வாயிலாக பணி நியமன ஆணைகளை வழங்கும் பிரதமர் மோடி, அரசு பணியில் எப்படி செயலாற்ற வேண்டும் என்பது குறித்து அவர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார். இந்த இளைஞர்கள் ஆன்லைன் மூலம் கர்மயோகி பிரராம்ப் மூலம் பயிற்சிகளை பெறுவார்கள்.

The post 70,000 பேருக்கு இன்று காணொலி வாயிலாக பணி நியமன ஆணைகளை வழங்குகிறார் பிரதமர் மோடி! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Delhi ,Union Government ,Dinakaran ,
× RELATED எல்லோரையும் போல நானும் எனது ஆட்டத்தை...