×

சிறப்பான சேவைக்காக தமிழ்நாடு நர்ஸ் உள்பட 15 பேருக்கு விருதுகள் ஜனாதிபதி முர்மு வழங்கினார்

புதுடெல்லி: தமிழ்நாடு நர்ஸ் உள்பட 15 பேருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகள் வழங்கினார். பல்வேறு அமைப்புகளில் சிறந்து விளங்கும் செவிலியர் பணியாளர்களை கவுரவிப்பதற்காக சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருது 1973ல் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. விருது பெறும் ஒவ்வொருவருக்கும் தகுதிச் சான்றிதழ், ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் ஒரு பதக்கம் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு 15 பேருக்கு நேற்று ஜனாதிபதி திரவுபதி முர்மு விருது வழங்கினார்.

துணை செவிலியர் பிரிவில் ரெபா ராணி சர்க்கார் (அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்), வலிவெட்டி சுபாவதி (ஆந்திரா), சரோஜ் பகிர்பாய் படேல் (தாதர் நாகர் ஹவேலி மற்றும் டாமன் டையூ), ரசியா பீகம் பி பி (லட்சத்தீவு), சுஜாதா அசோக் பாகுல் (மகாராஷ்டிரா) ஆகியோர் அடங்குவர். செவிலியர் பிரிவில் தமிழ்நாட்டை சேர்ந்த கே. அலமேலு மங்கையர்க்கரசி, புதுச்சேரியை சேர்ந்த எல்.எஸ் மணிமொழி, கிஜூம் சோரா கர்கா (அருணாச்சல்), டிம்பிள் அரோரா (டெல்லி), மேஜர் ஜெனரல் ஷீனா பி டி (டெல்லி), டாக்டர் பானு எம் ஆர் (கர்நாடகா), லீமாபோக்பம் ரஞ்சிதா தேவி (மணிப்பூர்), செல்வி வி லால்மங்கைஹி (மிசோரம்), டோலி பிஸ்வாஸ் (மேற்கு வங்கம்) ஆகியோர் பெற்றனர். லேடி ஹெல்த் விசிட்டர் பிரிவில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பினா பானி டேகா கவுரவிக்கப்பட்டார்.

The post சிறப்பான சேவைக்காக தமிழ்நாடு நர்ஸ் உள்பட 15 பேருக்கு விருதுகள் ஜனாதிபதி முர்மு வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : President Murmu ,Nadu ,New Delhi ,President ,Draupadi Murmu ,National ,National Florence Nightingale Awards ,Ministry of Health and Family Welfare ,Murmu ,
× RELATED உத்தரப் பிரதேசத்தில் ஆன்லைன் வணிக...