×

இயற்கைவள மேம்பாட்டுக்கு ரூ.7,000 கோடி.. உணவு மானியத்திற்கு ரூ.10,500 கோடி ஒதுக்கீடு; பட்ஜெட்டில் அட்டகாச அறிவிப்பு!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 2024-2025ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 2021ம் ஆண்டு மே மாதம் திமுக ஆட்சி பதவியேற்றது முதல் தமிழக சட்டப்பேரவையில் வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது சட்டப்பேரவையில் உரையாற்றிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்; தமிழ் சமூகம் உழவர்களை உச்சத்தில் வைத்துள்ளது. உழவர்கள் வாழ்வு வளம்பெற வேண்டும் என்ற நோக்கில் திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வேளாண் நிதி நிலை அறிக்கை உழவர் வாழ்க்கையை மேலும் வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்லும். உழவர் பெருமக்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். வேளாண்மை பட்ஜெட்டால் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும்.

* மொத்த சாகுபடி 155 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது.

* 2 ஆண்டுகளில் 1லட்சத்து 50 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது; நடப்பாண்டில் விவசாயிகளுக்கு 50 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்கப்படும்.

* கடந்த ஆண்டு 45 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது

* கடந்தாண்டு கரும்பு விவசாயிகளுக்கு ரூ.260 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது

* முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்துக்கு ரூ.206 கோடி ஒதுக்கீடு

* 2 லட்சம் விவசாயிகள் பயனடைய, 2 லட்சம் ஏக்கரில் பசுந்தாள் உரம் தயாரிக்க ரூ.20 கோடி ஒதுக்கீடு

* சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதல் மானியம் வழங்கப்படும் என அறிவிப்பு

* அரசு தோட்டக்கலை பண்ணைகளில் நடவுச் செடிகள் விற்பனை மையம் அமைக்கப்படும்.

*10,000 விவசாயிகளுக்கு தலா இரண்டு மண்புழு உரப்படுக்கைகள் வழங்கிட ரூ. 6 கோடி மானியம் வழங்கப்படும்.

* நிரந்தர மண்புழு உரத் தொட்டிகள், உரப்படுக்கை அமைக்க ரூ. 5 கோடி மானியம் வழங்கப்படும்.

* 2,482 கிராம ஊராட்சிகளில் 2 லட்சம் விவசாயிகளின் நிலத்தில் மண் பரிசோதனைக்கு ரூ. 6.27 கோடி நிதி ஒதுக்கீடு

* ஆடாதொடா, நொச்சி போன்ற தாவர வகைகளை தரிசு நிலங்களிலும் வயல் பரப்புகளிலும் நடவு செய்திட ரூ.1 கோடி ஒதுக்கீடு

* வட்டாரத்திற்கு ஒரு கிராமம் தேர்ந்தெடுக்கப்பட்டு உயிர்ம வேளாண்மைக்கான மாதிரிப் பண்ணை உருவாக்க ரூ. 38 லட்சம் ஒதுக்கீடு

* 14,000 ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகள் அமைக்க ரூ.42 கோடி ஒதுக்கீடு

* கிராமங்களில் மறுமலர்ச்சி ஏற்படுத்திட ஒரு கிராமம், ஒரு பயிர் என்ற திட்டம் 15,280 வருவாய் கிராமங்களில் செயல்படுத்தப்படும்

* கன்னியாகுமரியில் பரிசோதனை, பதப்படுத்தும் கூடங்கள் அமைத்து, தேனீ வளர்ப்புப் பயிற்சிகள் அளித்திட ரூ. 3.60 கோடி நிதி

* நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் சீவன் சம்பா போன்ற மருத்துவ குணம் கொண்ட நெல் ரகங்கள் பயிரிட விதை விநியோகம் செய்யப்படும்.

* இயற்கை விவசாயத்திற்கு இடுபொருள் தயாரித்தல் அமைக்க 100 குழுக்களுக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும்.

* வேளண் பரப்பை அதிகரித்து, உற்பத்தியை பெருக்க ரூ.108 கோடி நிதி ஒதுக்கீடு

* 1,500 ஏக்கரில் வீரிய ஒட்டு ரக ஆமண சாகுபடி செய்ய ரூ.18 லட்சம் ஒதுக்கீடு

* பயிர் உற்பத்தித்திறன் உயர்த்துதல் ஊக்குவிப்புத் திட்டத்துக்கு ரூ. 48 கோடி நிதி ஒதுக்கீடு

* ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானியங்களின் உற்பத்தியை அதிகரிக்க தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்திற்கு ரூ.65.3 கோடி நிதி

* துவரை சாகுபடிப் பரப்பு விரிவாக்க இயக்கம் செயல்படுத்த ரூ.17.50 கோடி நிதி ஒதுக்கீடு

* வேளாண் காடுகள் திட்டத்தின்கீழ் 10 லட்சம் வேப்ப மரக்கன்றுகள் வழங்கப்படும்

* சூரிய காந்தி பயிரிடும் பரப்பை அதிகரிக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு: 12.500 ஏக்கர் பரப்பளவில் சூரிய காந்தி சாகுபடி பரப்பு விரிவாக்க திட்டம் செயல்படுத்தப்படும்.

* உழவர் சந்தையை போன்று தரமான வேளாண் பொருட்களை நகர்ப்புறங்களில் விற்பனை செய்ய ரூ.5 கோடியில் 100 உழவர் அங்காடிகள் அமைக்கப்படும்.

* கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்துக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு

* முக்கிய பயிர் வகைகள், எண்ணெய் வித்துக்கள் பரப்பை விரிவாக்கம் செய்ய ரூ..108 கோடி

* 15,810 மெட்ரிக் டன் பயிர் வகைகள், எண்ணெய் வித்துக்கள் 50-60% மானியத்துடன் வழங்கப்படும்.

* தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்படாத சிறப்பு வேளாண் கிராமங்களை உருவாக்க மற்றும் பரவலாக்க ரூ.1.48 கோடி நிதி ஒதுக்கீடு

* ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானியங்களின் சாகுபடிப் பரப்பு மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்க ரூ.65.30 கோடி நிதி ஒதுக்கீடு

* நிலக்கடலை போன்ற வேளாண் பயிர்களை ஜிப்சம் உரம் வழங்க ரூ.1 கோடி ஒதுக்கீடு

* ஜிப்சம் வழங்கும் திட்டத்தில் 50,000 விவசாயிகள் பயன் பெறுவர்

* நெற்பயிருக்கு மாற்றாக குறைந்த நீர் தேவையுடைய மாற்றுப்பயிர் 1 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்திட ரூ.12 கோடி ஒதுக்கீடு

* விவசாயிகள் வருவாய் இழப்பிலிருந்து மீண்டு வர பயிர்க் காப்பீடு திட்டம் 5. 1,775 கோடியில் செயல்படுத்தப்படும்.

* கிராம வேளாண் முன்னேற்றக் குழுக்கள் அமைக்க ரூ.2.48 கோடி ஒதுக்கீடு

* வேளாண் சார்ந்த தொழில் தொடங்கும் பட்டதாரிகளுக்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும்

* சர்க்கரை ஆலைகளின் செயல் திறனை மேம்படுத்த ரூ.12.51 கோடி ஒதுக்கீடு

* செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் அரவை நிறுத்தம் ஏற்படுவதை தவிர்க்க ரூ.6.31 கோடி ஒதுக்கீடு

* 2.22 லட்சம் ஏக்கர் பரப்பில் நுண்ணீர்ப்பாசனம் அமைக்க ரூ.773.23 கோடி நிதி ஒதுக்கீடு.

* ஒருங்கிணைந்த தென்னை வளர்ச்சித் திட்டத்துக்கு ரூ.36.15 கோடி ஒதுக்கீடு

* விவசாயிகள் வருவாய் இழப்பிலிருந்து மீண்டு வர பயிர்க் காப்பீடு திட்டம் ரூ.1,775 கோடியில் செயல்படுத்தப்படும்.

* 2023-2024 அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.215 வழங்கப்படும்

* கரும்பு சாகுபடியை மேம்படுத்த ரூ.20.43 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

* ரூ.3.64 கோடியில் வறண்ட நிலங்களில் ஒருங்கிணைந்த “தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டம்” செயல்படுத்தப்படும்.

* பகுதிசார் தோட்டக்கலைப் பயிர் சாகுபடியினை ஊக்குவிக்க ரூ.2.70 கோடி நிதியில் விவசாயிகளுக்கு நடவுச்செடிகள் வழங்கப்படும்.

* நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தின் கீழ் உற்பத்தித் திறனை மேம்படுத்த ரூ.773.23 கோடி நிதி ஒதுக்கீடு

* மிளகாய் பயிரிடுவதை ஊக்குவிக்கவும், 200 பண்ணைக்குட்டைகள் அமைத்திடவும் ரூ.3.67 கோடி நிதி ஒதுக்கீடு

* தென்காசி நடுவக்குறிச்சியில் புதிய அரசு தோட்டக்கலை பண்ணை அமைக்கப்படும்

* கன்னியாகுமரியில் சூரிய தோட்டம், செங்கல்பட்டில் செம்பருத்தி நடவுச் செடிகள் உற்பத்தி மையம் அமைக்கப்படும்

* உதகை ரோஜா பூங்காவில் புதிய ரோஜா வகைகள் அறிமுகப்படுத்தப்படும்

* விவசாயிகள் நிரந்தரப் பந்தல் அமைத்து பாகல், புடல், பீர்க்கன், சுரைக்காய் பயிரிட ரூ. 9.40 கோடி மானியம்

* முந்திரி சாகுபடியை அதிகரிக்க ரூ.3.36 கோடி ஒதுக்கீடு

* புதிய பலா ரகங்களில் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.1.14 கோடி ஒதுக்கீடு

* ரூ.10 கோடி நிதி ஒதுக்கீட்டில் தோட்டக்கலைப் பண்ணை இயந்திர கண்காட்சி

* ஏற்றுமதிக்கு உகந்த மா ரகங்களின் உற்பத்தியை அதிகரிக்க ரூ.27.48 கோடி ஒதுக்கீடு

* ரூ.12.73 கோடி நிதி ஒதுக்கீட்டில் வாழை பரப்பு விரிவாக்கம், முட்டுக் கொடுத்தல் மேற்கொள்ள மானியம்

* மூலிகை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு

* பேரிச்சைப் பழம் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.30 இலட்சம் ஒதுக்கீடு..!

* மரவள்ளிப்பயிரில் மாவுபூச்சியை கட்டுப்படுத்த ரூ.1 கோடி பின்னேற்பு மானியம்

* ரூ.32.90 கோடி மானியத்தில் 207 தனியார் வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும்.

* சிறு குறு விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்க ரூ.170 கோடி ஒதுக்கீடு

* பாரம்பரிய காய்கறி இரகங்களை சாகுபடி செய்யவும், விதைகளை உற்பத்தி செய்யவும், ரூ.2 கோடி நிதியில் விவசாயிகளுக்கு மானியம்.

* செங்காந்தள், மருந்து கூர்க்கன், அவுரி சென்னா, நித்திய கல்யாணி ஆகிய மூலிகைப் பயிர்கள் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு.

* விவசாயிகள் சூரிய சக்தி மின்வேலிகள் அமைத்திட ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு

* விவசாயிகள் சூரிய சக்தி மின்வேலிகள் அமைத்திட ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு

* 10 நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரங்கள் மானியத்தில் வழங்கிட ரூ.90 இலட்சம் ஒதுக்கீடு.

* டெல்டா மாவட்டங்களில் 2,235 கிலோ மீட்டர் நீளத்திற்கு “சி” “டி” பிரிவு வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.

* ஈரோடு கள்ளக்குறிச்சி தர்மபுரி மாவட்டங்களுக்கு 8 மஞ்சள் வேக வைக்கும் இயந்திரங்களும் 5 மஞ்சள் மெருகூட்டும் இயந்திரங்களும் ரூ. 2.12 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.

* பொருளீட்டுக்கடன் வரம்பு ரூ. 3 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்படும்.

* விவசாயிகளின் சிறந்த விலை கிடைக்க ரூ. 60 கோடி மதிப்பிலான விளைபொருட்களை பண்ணை வழி வர்த்தகம் செய்ய வழிவகை செய்யப்படும்.

* சத்தியமங்கலம் செவ்வாழை, கொல்லிமலை மிளகு உள்ளிட்ட மேலும் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற ரூ.30 லட்சம் ஒதுக்கீடு

* ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்போருக்கு நடைமுறை முதலீட்டுக் கடனுக்கான வட்டி மானியத்திற்கு ரூ. 200 கோடி ஒதுக்கீடு

* விவசாயிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ரூ. 9 கோடி செலவில் மூன்று இடங்களில் வேளாண் கண்காட்சிகள் நடத்தப்படும்

* பெரம்பலூர், தூத்துக்குடி, கிருஷ்ணகிரி,ராமநாதபுரம், தருமபுரி, திண்டுக்கல், விருதுநகரில் இயற்கை வளம் மேம்படுத்தப்படும்; 7 மாவட்டங்களில் இயற்கை வள மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ. 43 கோடி ஒதுக்கீடு.

* வேளாண் சார்ந்த தொழில் தொடங்கும் தகுதியுள்ள புத்தாக்க நிறுவனங்களுக்கு மானியம் வழங்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு

* விவசாயிகளுக்கு பயிர்க் கடனாக ரூ.16,500 கோடி வழங்க இலக்கு

* தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளை கணினிமயமாக்க ரூ. 141 கோடி ஒதுக்கீடு

* உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்யும் உணவு மானியத்திற்கு ரூ.10,500 கோடி ஒதுக்கீடு

* காவிரி டெல்டா பகுதிகளில், 5,338 கி.மீ நீளம் கொண்ட ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்களை தூர்வார ரூ.110 கோடி ஒதுக்கீடு

* இயற்கைவள மேம்பாட்டு பணிகளுக்காக ரூ. 7,000 கோடி ஒதுக்கீடு

* விதை உற்பத்தி செய்திட பண்ணை மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.2 கோடி மானியம் வழங்கப்படும்.

The post இயற்கைவள மேம்பாட்டுக்கு ரூ.7,000 கோடி.. உணவு மானியத்திற்கு ரூ.10,500 கோடி ஒதுக்கீடு; பட்ஜெட்டில் அட்டகாச அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Minister of Agriculture and Farmers Welfare ,M. R. K. Paneer Selvam ,Principal ,Mu. K. ,Stalin ,Dimuka ,Tamil Nadu Legislative Assembly ,Dinakaran ,
× RELATED விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக...