×

நிலவின் தென்துருவத்தில் ரகசியங்களை தேடி பிரக்யான் ரோவர் நகர்ந்து வருவதாக இஸ்ரோ அறிவிப்பு..!!

பெங்களூர்: நிலவின் தென்துருவத்தில் ரகசியங்களை தேடி பிரக்யான் ரோவர் நகர்ந்து வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கியது. நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதன் வாயிலாக, அமெரிக்கா, சீனா மற்றும் முந்தைய சோவியத் யூனியனுக்கு பின், நிலவில் தரை இறங்கிய நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

நிலவின் தென்துருவத்தில் ரகசியங்களை தேடி பிரக்யான் ரோவர் நகர்ந்து வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ரோவரில் உள்ள கருவிகள், மண்ணில் உள்ள உலோகங்கள் என்ன, அதன் தன்மை என்ன என்பதையும் பரிசோதிக்க உள்ளது. லேண்டரில் இருந்து ரோவர் பிரிந்து 8 மீட்டர் பயணித்த காணொலியை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. நிலவின் சிவசக்தி பகுதியில் ரோவர் வலம் வருகிறது; சந்திரயான்-3 திட்ட சோதனை கருவிகளும் ஆய்வு செய்துவருகிறது.

The post நிலவின் தென்துருவத்தில் ரகசியங்களை தேடி பிரக்யான் ரோவர் நகர்ந்து வருவதாக இஸ்ரோ அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : isro ,Bangalore ,Moon ,Vikram Lander ,Prakyan ,
× RELATED விண்ணுக்கு சென்று பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி: இஸ்ரோ தகவல்