×

ஊத்துக்கோட்டையில் பலத்த மழை, சூறாவளி காற்று; மின்சாரம் துண்டிப்பால் இருளில் மூழ்கிய கிராமங்கள்: இன்று காலை மின் வினியோகம்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், அனைத்து கிராமங்களும் இருளில் மூழ்கி, கொசுக்கடியால் மக்கள் அவதிப்பட்டனர். இதைத் தொடர்ந்து, மழை விட்டதும் இன்று அதிகாலை சீரான மின்சாரம் வினியோகிக்கப்பட்டது. ஊத்துக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான பாலவாக்கம், தாராட்சி, தொம்பரம்பேடு, பாலவாக்கம், போந்தவாக்கம், பெரிஞ்சேரி உள்பட பல்வேறு கிராமங்களில் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அதிகளவில் கூழ், தர்பூசணி, மோர், வெள்ளரிக்காய் மற்றும் குளிர்பானங்களை நாடிச் சென்றனர்.

மதியம் 12 மணி முதல் மாலை 5 மணிவரை அதிகபட்ச வெயிலில் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் கிராம மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். இந்நிலையில், நேற்று மாலை 3 மணிக்குமேல் ஊத்துக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்று மற்றும் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யத் துவங்கியது. இதனால் ஊத்துக்கோட்டையின் ஒருசில பகுதிகளில் மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்தடை ஏற்பட்டது. மேலும் தொடர் மழையால் ஊத்துக்கோட்டை, அம்பேத்கர் நகர், பெரிஞ்சேரி உள்பட பல்வேறு பகுதிகளில் சாலையோரங்களில் மழைநீர் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் ஊத்துக்கோட்டை பகுதியில் மின்தடை காரணமாக, நேற்றிரவு அனைத்து கிராமங்களும் இருளில் மூழ்கியது.

இதனால் ஊத்துக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி கிராம மக்கள் இரவு முழுவதும் மின்தடை காரணமாக கொசுக்கடியால் குழந்தைகள் முதல் வயதானவர்கள் இரவு முழுவதும் தூங்க முடியாமல் பெரிதும் அவதிப்பட்டனர். இதைத் தொடர்ந்து, இன்று அதிகாலை 5 மணியளவில் மழை விட்டதும், ஊத்துக்கோட்டை பகுதிகளில் காலை 5 மணியளவில் சீரான மின் வினியோகம் துவங்கியது.

The post ஊத்துக்கோட்டையில் பலத்த மழை, சூறாவளி காற்று; மின்சாரம் துண்டிப்பால் இருளில் மூழ்கிய கிராமங்கள்: இன்று காலை மின் வினியோகம் appeared first on Dinakaran.

Tags : PUPUPKOTA ,Spurpurkotta ,
× RELATED ஊத்துக்கோட்டையில் மயான பாதை, மழைநீர்...