×

பட்டதாரி ஆசிரியர்களுக்கான கவுன்சலிங் ஒத்திவைப்பு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்று தொடங்க இருந்த பணிநிரவல் கவுன்சலிங், தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைத்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் இயங்கும், உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கவுன்சலிங் 22ம் தேதி தொடங்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது. பள்ளி கல்வி துறை இயக்குநர் பணி நியமனம் செய்த பிறகு பட்டதாரி ஆசிரியர் கவுன்சலிங் நடத்தலாம் என்று ஆசிரியர்கள் தரப்பில் பள்ளிக் கல்விஅமைச்சர் மகேஷ் பொய்யாமொழியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் தியாகராஜன் கூறியதாவது: பணி நிரவல் கவுன்சலிங், கடந்த 1.8.2022 நிலவரப்படி மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

இதனால் பல ஆயிரம் ஆசிரியர்கள் பணி நிரவலில் வேறு பள்ளிகளுக்கு செல்லும் சூழ்நிலை இருந்தது. இந்நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த சீரிய நடவடிக்கையால் அரசுப் பள்ளிகளை நோக்கி மாணவர்கள் வரும் சூழ்நிலையில், இந்த ஆண்டின் நிலவரப்படி பணி நிரவல் கவுன்சலிங் நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ்ெபாய்யாமொழியை நேரில் சந்தித்து இது குறித்து கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் பேரில் இந்த ஆண்டின் நிலவரப்படி நடத்த முடிவு செய்து அறிவுரையும் வழங்கினார். இதையடுத்து இன்று தொடங்க இருந்த பணிநிரவல் கவுன்சலிங் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆசிரியர்கள் தரப்பில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

The post பட்டதாரி ஆசிரியர்களுக்கான கவுன்சலிங் ஒத்திவைப்பு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...