×

பட்ட மேற்படிப்பு மற்றும் முதுநிலை பட்டய படிப்புகளில் சேர ஜூலை 12-ம் தேதி கடைசி நாள்

சென்னை: தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்ட படிப்பு, எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்ட மேற்படிப்பு மற்றும் பிஜி.டி.எல்.ஏ (தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை மாலை நேர பட்டயப்படிப்பு), தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும் (வார இறுதி) பட்டய படிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) படிப்புகள் சென்னை பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பிஜி.டி.எல்.ஏ. மற்றும் டி.எல்.எல் (ஏ.எல்.) படிப்புகள் தமிழக அரசின் அங்கீகாரத்துடன் நடைபெற்று வருகின்றது.

பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை, எம்.ஏ (தொழிலாளர் மேலாண்மை), பிஜி.டி.எல்.ஏ. மற்றும் டி.எல்.எல் (ஏ.எல்.) ஆகிய பட்ட / பட்ட மேற்படிப்பு / பட்டய படிப்புகள் தொழிலாளர் நல அலுவலர் பதவிக்கு பிரத்யேக கல்வித் தகுதியாக தமிழ்நாடு தொழிற்சாலைகள் தொழிலாளர் நல அலுவலர் விதிகளில் வரையறுக்கப்பட்டுள்ளது. இக்கல்வி நிலையத்தில் பயின்ற மாணவர்கள் பல்வேறு தொழிற்சாலைகளில் மனிதவள மேம்பாட்டு மேலாளராக பணிபுரிந்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும், தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறையில் தொழிலாளர் உதவி ஆணையர் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வர் பதவிகளுக்கு பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) மற்றும் பிஜி.டி.எல்.ஏ. ஆகிய பட்ட, பட்ட மேற்படிப்பு / பட்டய படிப்புகளை முன்னுரிமை தகுதிகளாக நிர்ணயம் செய்து அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

விருப்பமுள்ள இளநிலை பட்டம் பெற்ற மாணவர்கள் முதுநிலை பட்ட மற்றும் பட்டய படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்கள் மதிப்பெண் அடிப்படையில் அரசு விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தங்கும் விடுதி வசதி, இளநிலை மற்றும் முதுநிலை பயிலும் ஆண் மாணவர்களுக்கு மட்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 12.07.2023 அன்றும் அனைத்து வகையினருக்கும் விண்ணப்ப கட்டணம் ரூ.200 மற்றும் SC/ST பிரிவினருக்கு ரூ.100 ஐ கட்டணமாக நிர்ணயித்துள்ளனர் இதில் முக்கியமாக சாதிச்சான்றிதழ் நகல் தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

விண்ணப்பங்களை தபாலில் பெற, விண்ணப்ப கட்டணத்தை தபால் கட்டணம் ரூ.50/ உடன் வங்கி SC/ST வரைவோலையினை “The Director, Tamilnadu Institute of Labour Studies, Chennai” என்ற பெயரில் எடுத்து பதிவுத்தபால், விரைவு அஞ்சல், கொரியர் மூலம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மதிப்பெண் மற்றும் அரசு விதிகளின் அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவித்துள்ளனர்.

 

The post பட்ட மேற்படிப்பு மற்றும் முதுநிலை பட்டய படிப்புகளில் சேர ஜூலை 12-ம் தேதி கடைசி நாள் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil ,Nadu Labour Education Station PA ,M. PA ,
× RELATED அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்கு...