×

பணம் பெற்று பொறுப்புகள் வழங்குவதாக பாஜ மாவட்ட தலைவரை கண்டித்து போஸ்டர்: பண்ருட்டியில் பரபரப்பு

பண்ருட்டி: பணம் பெற்று பொறுப்புகள் வழங்குவதாக பாஜக மாவட்ட தலைவரை கண்டித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பண்ருட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்ட பாஜக தலைவராக கிருஷ்ணமூர்த்தி இருந்து வருகிறார். இவரை கண்டித்து நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காடாம்புலியூர், கொள்ளுக்காரன் குட்டை, முத்தாண்டிகுப்பம், மருங்கூர், மேல்மாம்பட்டு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த போஸ்டரில் ‘வேண்டாம்… வேண்டாம்… பொறுப்புகளை விற்பனை செய்த மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி வேண்டாம்’ என்று குற்றம்சாட்டி போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டபோது ‘மாவட்டம் முழுவதும் விஷமிகள் போஸ்டர் ஒட்டி பாஜவை விளம்பரப்படுத்தி உள்ளனர்’ என்று கூறினார்.

The post பணம் பெற்று பொறுப்புகள் வழங்குவதாக பாஜ மாவட்ட தலைவரை கண்டித்து போஸ்டர்: பண்ருட்டியில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Baja ,Panruti ,BJP ,Krishnamurthy ,Cuddalore district ,Neyveli Assembly Constituency ,Kadampulyur ,Panruti Panruti ,
× RELATED கேரள உள்ளாட்சி தேர்தலில் பாஜ தனது...