×

ஆளுநர் ஆர்.என்.ரவி என்ன அரசியல் செய்தாலும் அது தமிழ்நாட்டில் எடுபடாது: அமைச்சர் பொன்முடி பதிலடி

சென்னை : ஒவ்வொரு துறையிலும் ஆளுநர் அரசியல் செய்து வருவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.தமிழக ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமையில் கவர்னர் மாளிகையில் அனைத்து பல்லைக்கழக பிரதிநிதிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பிறகு ஆளுநர் மாளிகை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “பல்கலைக்கழகங்களில் வெளிப்படை தன்மையுடன் சிண்டிகேட், செனட் கூட்டங்கள் நடைபெறுவதில்லை. பல பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் காலியாக உள்ளன. பல பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லாததால் பல்கலைக்கழக செயல்பாடுகள் முடங்கி உள்ளன,” என்று கூறப்பட்டது.

இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் பொன்முடி, “ஆளுநர் அரசியல் செய்து வருகிறார்.நாகை மீன் வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு ஆளுநர் மாளிகையில் நடக்கும் என்பதை எப்படி ஏற்க முடியும்?. பல்கலைக்கழகத்தில் கூட்டங்களை நடத்த வேண்டும் எனக்கூறுபவர் ஆளுநர் மாளிகையில் கூட்டம் நடத்துவது ஏன்?.சிண்டிகேட் கூட்டங்கள் பல்கலைக்கழகங்களில் மட்டுமே நடைபெற்று வருகிறது.என்ன நடக்கிறது என்பதை முழுமையாக தெரிந்து கொண்ட பிறகே ஆளுநர் பேச வேண்டும்.மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசையே மதிக்காமல் ஆளுநர் செயல்படுகிறார்.

ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என பாஜக தலைவர் அண்ணாமலையே கூறிவிட்டார்.ஆளுநர் என்ன அரசியல் செய்தாலும் அது தமிழ்நாட்டில் எடுபடாது. எல்லா துறையிலும் தாம் தான் எல்லாம் என ஆளுநர் ரவி நினைக்கிறார். பல்கலைக்கழக துணை வேந்தர் தேடுதல் குழுவுக்கு 3 உறுப்பினர்களை அறிவித்த பிறகும் அதை ஏற்க மறுக்கிறார் ஆளுநர்.வழக்கமான 3 பேரை தவிர யுஜிசி சார்பில் ஒருவரை நியமிக்க வேண்டும் என ஆளுநர் கூறுகிறார்.யுஜிசி சார்பில் உறுப்பினர் ஒருவரை நியமிக்க வேண்டிய அவசியம் இல்லை.அவ்வாறு நியமிக்க ஆளுநர் விரும்பினால் அவரது சார்பில் நியமிக்கப்படும் உறுப்பினரை யுஜிசி பரிந்துரைப்படி நியமிக்கலாம்,”என்று கூறினார்.

The post ஆளுநர் ஆர்.என்.ரவி என்ன அரசியல் செய்தாலும் அது தமிழ்நாட்டில் எடுபடாது: அமைச்சர் பொன்முடி பதிலடி appeared first on Dinakaran.

Tags : Governor ,RN ,Ravi ,Tamil Nadu ,Minister ,Ponmudi ,Chennai ,Higher ,Chancellor ,
× RELATED அனைத்து மாநிலங்களுக்கும் தமிழ்...