×

பொங்கல் பண்டிகையை ஒட்டி இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை அரசு பேருந்துகளில் செல்ல 1.25 லட்சம் பயணிகள் முன்பதிவு..!!

சென்னை: இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை அரசு பேருந்துகளில் செல்ல தமிழ்நாடு முழுவதும் 1.25 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். பொங்கல் திருநாளை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கும் செல்ல கோயம்பேடு, தாம்பரம், மாதவரம் உள்ளிட்ட 6 இடங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுதவிர திருச்சி, தஞ்சாவூர், கரூர், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை அரசு பேருந்துகளில் செல்ல தமிழ்நாடு முழுவதும் 1.25 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். சென்னையில் இருந்து மட்டும் பல்வேறு ஊர்களுக்கு செல்ல 86,000 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னை மற்றும் பிற நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட்டு வருகின்றன. பொங்கல் பண்டிகையை ஒட்டி 13,184 சிறப்பு பேருந்துகள் உட்பட 19,484 பேருந்துகள் இயங்க தொடங்கின. தமிழ்நாட்டின் பிற இடங்களில் இருந்து 8,478 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

The post பொங்கல் பண்டிகையை ஒட்டி இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை அரசு பேருந்துகளில் செல்ல 1.25 லட்சம் பயணிகள் முன்பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Pongal festival ,CHENNAI ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED 2025 பொங்கல் பண்டிகையை ஒட்டி வேட்டி, சேலை...