×

பொள்ளாச்சி அருகே மூட்டை மூட்டையாக கொட்டப்பட்ட கழிவுகள்: மருத்துவக்கழிவா என பொதுமக்கள் அச்சம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உள்ள கக்கடவு ஊராட்சிக்குட்பட்ட கோவில் பாளையத்தில் இருந்து காணிவாலம் பாளையம் செல்லும் சாலையோரத்தில் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் ராட்சத அளவில் பயன்படுத்தப்படாத பாறை குழி இருந்தது. கடந்த சில தினங்களாக அந்த குழியில் மூட்டை மூட்டையாக கழிவுப்பொருட்கள் நிரப்பட்டன.

இதில் அதிக துர்நாற்றம் வீசுவதோடு அந்த பகுதியில் அதிக ஈக்கள் தொல்லையும் இருந்துள்ளது. இந்த நிலையில் இன்று கழிவுகள் கொட்டப்பட்ட பாறைக்குழியை JCB இயந்திரம் கொண்டு தோட்டத்து உரிமையாளர் மண் போட்டு மூட முற்பட்டபோது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். பின்னர் போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்ததை அடுத்து அங்கு விரைந்த அதிகாரிகள் பாறைகுழியில் கொட்டப்பட்ட கழிவுகள் மருத்துவ கழிவுகளா அல்லது இறைச்சி கழிவுகளா என ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

The post பொள்ளாச்சி அருகே மூட்டை மூட்டையாக கொட்டப்பட்ட கழிவுகள்: மருத்துவக்கழிவா என பொதுமக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Pollachi ,Kovil Palayam ,Kanivalam Palayam ,Kakkadavu panchayat ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!