×

காவல் பணியினை செம்மைப்படுத்த பொது மக்களிடமிருந்து கருத்துக்கள் வரவேற்பு

சென்னை: காவல் பணியினை செம்மைப்படுத்த பொது மக்களிடமிருந்து கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து வெளியான அறிக்கையில்”

காவல் துறையின் பணியை செம்மையாக்கும் வண்ணம், தமிழ்நாடு அரசு 2022 ஆம் ஆண்டு 5-வது காவல் ஆணையம் (Police Commission) அமைத்துள்ளது. ஐந்தாவது காவல் ஆணையம், அசோக்நகர், சென்னை, காவல் பயிற்சி கல்லூரி அலுவலக வளாகத்தில் இயங்கி வருகிறது.

காவல் பணியினை செம்மைப்படுத்த பொது மக்களிடமிருந்து கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன என்றும், நேரில் சந்தித்து மனு அளிக்க விரும்புவர்கள் 05.12.2023 அன்று காலை 10.30 மணி முதல் பிற்பகல் 01.30 மணி வரை மேற்கண்ட முகவரியில் நேரிடையாக சமர்ப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், “மிக்ஜாம்” புயல் மழையினால் பொது மக்களின் கருத்துக்கள் நேரில் பெற இயலவில்லை. எனவே, தபால் மூலம் தெரிவிக்க விரும்புவோர் கீழ்க்கண்ட முகவரிக்கு தபாலில் தங்களின் கருத்துக்களை எழுதி அனுப்பலாம்.

முகவரி : தலைவர்.
5-வது காவல் ஆணையம்.
காவல் பயிற்சி கல்லூரி வளாகம்.
அசோக் நகர், சென்னை-83

மின் அஞ்சலில் அனுப்ப விரும்புவோர் கீழ்க்கண்ட மின் அஞ்சல் முகவரிக்கு Aυπό E-Mail ID: fifthpolicecommision@gmall.com

நேரில் சந்தித்து மனு அளிக்க விரும்புபவர்கள் 21.12.2023 அன்று காலை 10.30 மணி முதல் பிற்பகல் 01.30 மணி வரை மேற்கண்ட முகவரியில் நேரிடையாக சமர்ப்பிக்கலாம்.

மேல் விவரங்களுக்கு கீழ்க்கண்ட கைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

கைபேசி எண்: 9498155777
காவல் கண்காணிப்பாளர். அசோக் நகர், சென்னை-83.
5-வது காவல் ஆணையம்,

The post காவல் பணியினை செம்மைப்படுத்த பொது மக்களிடமிருந்து கருத்துக்கள் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED வாகன நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்: அறிக்கை தர சென்னை ஐகோர்ட் ஆணை