×

கம்பம் நகருக்குள் அரிசி கொம்பன் யானை புகுந்ததால் பரபரப்பு; பொதுமக்கள் வெளியே வர தடை..!!

தேனி: மீண்டும் தமிழ்நாட்டு எல்லைக்குள் நுழைந்த அரிசிக்கொம்பன் கம்பம் நகருக்குள் புகுந்து குடியிருப்பு பகுதிகளில் உலவி வருவதால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. கேரளாவின் இடுக்கி மாவட்டம் ராஜ காடு அருகே சின்னக்கள் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக காட்டில் சுற்றி திரிந்த அரிசிக்கொம்பன் யானை கடந்த ஏப்ரல் 60ம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.

அன்றைய தினம் இரவே அரிசி கொம்பனை பெரியார் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட கண்ணகிகோட்ட வனப்பகுதியில் கேரளா வனத்துறையினர் விட்டனர். மேலும் அதன் நடமாட்டத்தை கண்காணிக்க கழுத்தில் ரேடியோ காலர் கருவி பொருத்தப்பட்டது. கேரள வனப்பகுதியில் விடப்பட்ட அரிசி கொம்பன் சில நாட்களில் தமிழ்நாட்டின் ஸ்ரீ வில்லிப்புத்தூர், மேகமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட இரவங்கலாறு வனப்பகுதியில் நுழைந்தது.

இதனால் பொதுமக்கள் மேகமலைக்கு சுற்றுலா செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். இதனிலையே அரிசி கொம்பன் யானை மீண்டும் இடம் பெயர்ந்து கேரள வனப்பகுதிக்கு சென்றது. இந்நிலையில் மீண்டும் தமிழ்நாட்டு எல்லைக்குள் புகுந்த அரிசிக்கொம்பன் கூடலூர் வழியாக கம்பம் நகருக்குள் புகுந்து குடியிருப்பு பகுதிகளில் உலாவி வருவதால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

The post கம்பம் நகருக்குள் அரிசி கொம்பன் யானை புகுந்ததால் பரபரப்பு; பொதுமக்கள் வெளியே வர தடை..!! appeared first on Dinakaran.

Tags : City ,Polam ,Tamil Nadu ,Rice ,Pole City ,
× RELATED சென்னை மாநகரில் சீரான மின்விநியோகம்...