×

பிரதமர் மோடியின் சிக்கிம் பயணம் ரத்து

புதுடெல்லி: பிரதமர் மோடி இன்றும் நாளையும் சிக்கிம், மேற்கு வங்கம், பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார். சிக்கிம் உருவாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் கேங்டாக்கில் மிகப்பெரிய அளவில் விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காலை 11 மணிக்கு தொடங்கும் நிகழ்ச்சி ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக காலை 10 மணிக்கே தொடங்கும் என்று சற்றுமுன் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மோசமான வானிலை காரணமாக திடீரென பிரதமர் மோடியின் பயணம் ரத்து செய்யப்படுவதாகவும், மக்கள் மத்தியில் மேற்கு வங்கத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் அவர் உரையாற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சாலைகளில் கூடியிருந்த சிக்கிம் மக்களும் பாஜ தொண்டர்களும் ஏமாற்றமடைந்தனர். காணொலி மூலம் சிக்கிம் 50 ஆண்டுகள் விழாவில் மோடி கலந்து கொண்டுள்ளார்.

The post பிரதமர் மோடியின் சிக்கிம் பயணம் ரத்து appeared first on Dinakaran.

Tags : Modi ,Sikkim ,New Delhi ,West Bengal ,Bihar ,Uttar Pradesh ,Gangtok ,Dinakaran ,
× RELATED நேருவை வெறுப்பது போலவே, மகாத்மா...