×

நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு மஞ்சள் பை வழங்கப்பட்டது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அறிஞர் அண்ணா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாட்டை உருவாக்க வலியுறுத்தியும், சுற்றுச்சூழலை காப்பதே நமது கடமை என்ற உணர்வோடு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், உணவு பொட்டலங்கள் கட்ட பயன்படுத்தும் நெகிழித்தாள், தெர்மாக்கோல் போன்றவற்றை முற்றிலும் தவிர்த்து மற்ற பொருட்களான பாக்கு தட்டுகள், தாமரை, வாழை இலைகள் மற்றும் உலோகத்தில் ஆன பொருட்கள் மண் குவளைகள் பயன்படுத்தி இனிவரும் சந்தேகம் இருக்கு பிளாஸ்டிக் மாசு இல்லாத தமிழகத்தை உருவாக்க வலியுறுத்தி அப்பள்ளியில் படித்து வரும் 500-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு மஞ்சள் பை வழங்கப்பட்டது.

தொடர்ந்து பள்ளி மாணவிகள் பிளாஸ்டிக் மாசிலா தமிழகத்தை உருவாக்க உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் மாசு கட்டுபாட்டு வாரியம் சுற்று சூழல் பொறியாளர் மணிமேகலை, கிருபா, முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், தலைமையாசிரியை சாந்தி, தமிழ்நாடு ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மை கூட்டமைப்பு நிறுவனர் சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு மஞ்சள் பை வழங்கப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Government Girls Higher Secondary School ,Chengalpattu ,Arijar Anna Girls Higher Secondary School ,Tamil Nadu ,
× RELATED பள்ளி மாணவி மாயம்; வாலிபர் மீது புகார்