×

குழாய் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 3 மண்டலங்களில் 24 மணி நேரம் குடிநீர் விநியோகம் நிறுத்தம்: சென்னை குடிநீர் வாரியம் தகவல்

சென்னை: ஸ்டெர்லிங் சாலையில் குழாய் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மண்டலம் 9, 10 மற்றும் 13க்குட்பட்ட பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் 24 மணி நேரத்திற்கு நிறுத்தம் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் எடுத்துச் செல்லும் 1050 மிமீ விட்டமுள்ள பிரதான உந்து குழாயுடன் 900 மிமீ விட்டமுள்ள பிரதான உந்து குழாயை இணைக்கும் பணிகள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் ஸ்டெர்லிங் சாலையில் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் 8ம் தேதி காலை 6 மணி முதல் 9ம் தேதி காலை 6 மணி வரை தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய 3 மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கு குழாய்கள்
மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம். மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

The post குழாய் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 3 மண்டலங்களில் 24 மணி நேரம் குடிநீர் விநியோகம் நிறுத்தம்: சென்னை குடிநீர் வாரியம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai Drinking Water Board ,Chennai ,Sterling Road ,9 ,Dinakaran ,
× RELATED 2024-25 இரண்டாம் அரையாண்டிற்கான குடிநீர்...