×

ஊறுகாய் டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி

கோடை சீசன் வந்து விட்டாலே ஊறுகாய்தான் நினைவில் வரும். மாங்காய், கிடாரங்காய், எலுமிச்சங்காய்களில் ஊறுகாய் போடுவது மட்டுமில்லாமல் அசைவத்திலும் ஊறுகாய் என வெரைட்டிகளுக்கு அளவே இல்லை. இப்படி பலவிதமான ஊறுகாய் போடும் போது சில விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும்.

*ஊறுகாயின் ராணியான ஆவக்காய்க்கு மாங்காய் ஃப்ரெஷ்ஷாக இருக்க வேண்டும். அப்போதுதான் பறித்த காய்கள் என்றால் உடனே நறுக்கி ஊறுகாய் போடலாம். மறுநாள் ஊறுகாய் போட வேண்டுமெனில் காயை தண்ணீரில் போட்டு வைக்க பழுக்காது, முற்றாது. தோல் சுறுங்காமல் இருக்கும்.

*சிலவகை ஊறுகாய்க்கு எண்ணெய் அப்படியே ஊற்ற வேண்டும். சிலவகைகளுக்கு எண்ணெயை சூடாக்கி ஆறவைத்தே ஊற்ற வேண்டும்.

*ஊறுகாய்க்கு மிளகாய் சிவப்பாக, புதியதாக இருக்க வேண்டும். நாள்பட்ட மக்கிய வண்டுகள் உள்ள மிளகாய் ஊறுகாயைச் சீக்கிரம் கெடச் செய்துவிடும்.

*புளியும், மிளகாயும் புதியதாக பளிச்சென்று இருந்தால்தான் ஊறுகாயும் நல்ல நிறத்தில் இருக்கும்.

*ஊறுகாய்க்கு கழுவி துடைத்து, உலர்த்திப் பயன்படுத்த வேண்டிய பொருட்களை கொஞ்சம் தாமதமாக உலர்ந்தாலும் சரி என நிழலில்தான் உலர்த்த வேண்டும்.

*வடு மாங்காய்க்கு மாங்காய் உருண்டை வடிவத்தில் வாங்க வேண்டும். நீள வடிவ மாங்காய் துவர்க்கும்.

*சரியான அளவில், சரியான முறையில் போடும் ஊறுகாய் பலநாட்கள் கெடாது. கெடாமல் இருக்க ஒரு சிட்டிகை சோடியம் பென்சோஸிட் சேர்க்கலாம்.

*கல் உப்பு போட்டால்தான் அளவு சரியாக, சுவை நன்றாக இருக்கும்.

*பூண்டு ஊறுகாய்க்கு பெரிய பற்கள் கொண்ட பூண்டைவிட மலைப் பூண்டே சிறந்தது.

– மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.

The post ஊறுகாய் டிப்ஸ் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED ஆயுர்வேதத் தீர்வு!