×

போலி ஆவணம் மூலம் ரூ.3 கோடி சொத்து அபகரித்த பெண் உள்பட 2 பேர் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை

சென்னை: போலி ஆவணம் மூலம் ரூ.3 கோடி மதிப்புள்ள சொத்தை அபகரித்த பெண் உட்பட 2 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காஞ்சிபுரம் பி.எஸ்.கே.தெருவை சேர்ந்த லட்சுமி பாய் மற்றும் அவரது சகோதரி பத்மா பாய் ஆகியோர் புகார் ஒன்று அளித்தனர். அந்த புகாரில், எங்களுக்கு சென்னை சிந்தாதிரிப்பேட்டைட காக்ஸ் தெருருவில் தலா 1083 சதுரடி கொண்ட இரண்டு வீடுகள் உள்ளது. இந்த வீட்டை கலைச்செல்வி மற்றும் சுசீலா ஆகியோர் போலி ஆவணம் மூலம் அபகரித்து விட்டனர். எனவே அவர்களிடம் இருந்து எங்கள் வீட்டை மீட்டு தர வேண்டும் என்று புகார் அளித்தனர்.

அந்த புகாரின் படி மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி உத்தரவுப்படி மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி குழுவினர் விசாரணை நடத்தினர். அதில், கலைச்செல்வி, சுசீலா மற்றும் அன்பு ஆகியோர் தங்களது பெயரில் போலியாக ஆவணங்கள் உருவாக்கி மோசடி செய்து ரூ.3 கோடி மதிப்புள்ள வீடுகளை அபகரித்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து கலைச்செல்வி, சுசீலா மற்றும் அன்பு ஆகியோர் மீது மோசடி உள்ளிட்ட 9 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நேற்று கைது செய்தனர்.

The post போலி ஆவணம் மூலம் ரூ.3 கோடி சொத்து அபகரித்த பெண் உள்பட 2 பேர் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Central Crime Branch ,CHENNAI ,Dinakaran ,
× RELATED குடும்பத்துடன் திருப்பதிக்கு...