×

பள்ளிகளின் தேவையை பூர்த்தி செய்ய 24 பேர் குழு அமைப்பு

சென்னை: பள்ளிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தலைமைச் செயலாளர் தலைமையில் 24 பேர் கொண்ட குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள அரசாணை: பள்ளிகளுக்கான தேவைகளை பூர்த்தி செய்யவும் அவற்றை கண்காணிக்கவும் அரசுத் தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் இதன் உறுப்பினர் செயலாளராக இருப்பார்.

மேலும், நிதித்துறை, பொதுப் பணித் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை, முனிசிபல் நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோகத்துறை, குடும்ப நலத்துறை, சமூக நலத்துறை, போக்குவரத்து துறை, மின்சக்தி துறை, உள்துறை, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை ஆகிய துறைகளின் செயலாளர்கள், தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர் செயலாளர் ஆகியோர் இந்த குழுவின் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

இந்த குழுவினர், பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மூலம் தெரிவிக்கப்படும் தேவைகளை பூர்த்தி செய்தல் மற்றும் கண்காணித்தல், போன்ற பணிகளில் ஈடுபடுவார்கள். குறிப்பாக அடிப்படை வசதிகள், கற்றல் கற்பித்தல் பணிகள், மாணவர்கள் வருகை மற்றும் பள்ளிகளில் அவர்களை தக்க வைத்தல், பள்ளி மேலாண்மை உள்ளிட்ட பணிகளை செய்வதுடன், 3 மாதங்களுக்கு ஒரு முறை பள்ளி மேலாண்மை குழுக் கூட்டத்தை நடத்துவது, அரசுச் செயலாளர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை இணைந்து மாநில அளவிலான கண்காணிப்பு குழுவை ஒருங்கிணைத்து குழு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பதிவு செய்வார்கள்.

The post பள்ளிகளின் தேவையை பூர்த்தி செய்ய 24 பேர் குழு அமைப்பு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Chief Secretary ,Dinakaran ,
× RELATED பள்ளிகளில் மாணவர்கள் மன அழுத்தம்...