×

அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி: அமலாக்கத்துறை கோரிக்கையை நிராகரித்தது ஐகோர்ட்

அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. செயலலிதா முதல்வராக இருந்த போது போக்குவரத்து ஊழியர் நியமனத்தில் முறைகேடு வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது உடல்நலக்குறைவு காரணமாக ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வருகிறார். இருதயத்தில் 3 ரத்த நாளங்களில் அடைப்பு இருப்பதால் பையாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவக் குழு பரிந்துரைத்திருந்தது.

பையாஸ் அறுவை சிகிச்சை செய்ய இஎஸ்ஐ மருத்துவர்களும் பரிந்துரை செந்திருந்தனர். செந்தில் பாலாஜி ஏற்கனவே காவேரி மருத்துவமனை மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வருவதால் அங்கு மாற்றுமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. இதனிடையே செந்தில் பாலாஜியின் மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது; எய்ம்ஸ் மருத்துவக் குழு பரிசோதனை நடத்த வேண்டும் என அமலாக்கத்துறை கோரிக்கை வைத்தது.

அதற்கு எய்ம்ஸ் மருத்துவ குழு பரிசோதனை செய்ய எந்த ஆட்சேபனையும் இல்லை என செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதிட்டார். இதனை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற நீதிபதிகள் அனுமதி வழங்கினர். மேலும் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்கான செலவை செந்தில் பாலாஜியை ஏற்க வேண்டும். காவேரி மருத்துவமனைக்கு சென்று அமலாக்கத்துறை தரப்பு மருத்துவர்கள் பரிசோதனை செய்யலாம்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் தொடரும். அமலாக்கத்துறை காவல் கோரும் போது சிகிச்சையில் இருந்த நாட்களை கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது என அறிவுறுத்திய நீதிபதிகள் செந்தில் பாலாஜி மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது அமலாக்கத்துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஜூன் 22ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். சென்னை உயர்நீதிமன்ற உத்தராவை தொடர்ந்து சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜி மாற்றப்படுகிறார்.

 

The post அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி: அமலாக்கத்துறை கோரிக்கையை நிராகரித்தது ஐகோர்ட் appeared first on Dinakaran.

Tags : Minister Senthil Balaji ,Kaveri ,Hospital ,Enforcement Department ,Chennai High Court ,Minister ,Senthil Balaji ,Kaveri Hospital ,Senthil Palaji ,Cauvery Hospital ,iCourt ,
× RELATED அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான...