×

பெரியகுளம் அருகே கல்லாற்றை கடக்கும் போது திடீர் வெள்ளம்: பாறையில் 3 சிறார்கள் உட்பட ஒரே குடும்பத்தின் 5 பேர் தத்தளிப்பு

தேனி: பெரியகுளம் ஆற்றை கடக்கும் போது திடீரென வெள்ளம் அதிகாரித்ததால் பாறைகளில் தஞ்சமடைந்த 3 சிறுவர்கள் உட்பட 5 பேரை 2 மணி நேர போராட்டத்திற்கு பின்பு கயிறு கட்டி கிராமத்தினர் பத்திரமாக மீட்டுள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து பெய்யும் கனத்த மழையால் கல்லாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த 3 தினங்களாக மழைப்பொழிவு இல்லாததால் சின்னூர் மக்கள் கல்லாற்றை கடந்து வந்தனர்.

நேற்று நடைபெற்ற கோயில் திருவிழாவிற்காக ராமன் என்பவர் தமது மகள் அம்பிகா, குமரன், ரித்திக், தினேஷ் ஆகிய 3 பேரன்களையும் அழைத்து கொண்டு ஆற்றை கடந்துள்ளார். அப்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 5 பேரும் ஆற்றின் நடுவே இருந்த பாறையில் தஞ்சம் அடைந்தது தத்தளித்தனர். தகவலறிந்து விரைந்து வந்தா இளைஞர்கள் ஆற்றின் நடுவே 2 மணி நேரமாக சிக்கி தவித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரையும் கயிறு கட்டி பத்திரமாக மீட்டு கிராமத்திற்கு அழைத்து சென்றனர்.

The post பெரியகுளம் அருகே கல்லாற்றை கடக்கும் போது திடீர் வெள்ளம்: பாறையில் 3 சிறார்கள் உட்பட ஒரே குடும்பத்தின் 5 பேர் தத்தளிப்பு appeared first on Dinakaran.

Tags : Periyakulam ,Theni ,Dinakaran ,
× RELATED பெரியகுளத்தில் நிறுவன பங்களிப்பு நிதியில் கண்மாய் தூர்வாரும் பணி