×

பேட் கம்மின்ஸ் டார்கெட்டு முதல் பந்திலே விக்கெட்டு

ஐபிஎல் போட்டிகளில், இன்னிங்சின் முதல் பந்திலேயே விக்கெட்டை கைப்பற்றி அதிரடி சம்பவத்தை அரங்கேற்றி உள்ளார், சன்ரைசர்ஸ் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ். டெல்லி அணிக்கு எதிரான 55வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் பேட் கம்மின்ஸ் போட்டியின் முதல் பந்தை அற்புதமாக வீச, டெல்லி அணியின் கருண் நாயர் தடுத்தாட, அதை விக்கெட் கீப்பர் இஷான் கிஷண் லாவகமாக பிடித்து அவுட்டாக்கினார்.

தொடர்ந்து, தனது இரண்டாவது ஓவராக, இன்னிங்சின் 3வது ஓவரை வீசிய கம்மின்ஸ், அதிலும் முதல் பந்திலேயே, ஃபாப் டூப்ளெஸிசை வீழ்த்தி கரகோஷம் பெற்றார். அதைத் தொடர்ந்து, தனது 3வது ஓவராக, இன்னிங்சின் 5வது ஓவரை வீசியபோதும், முதல் பந்திலேயே, அபிஷேக் பொரெலை, கம்மின்ஸ் வெளியேற்றினார். தொடர்ந்து, 3 ஓவர்களை வீசி அவற்றில் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி புதிய சாதனை படைத்தார் பேட் கம்மின்ஸ்.

The post பேட் கம்மின்ஸ் டார்கெட்டு முதல் பந்திலே விக்கெட்டு appeared first on Dinakaran.

Tags : Pat Cummins ,Sunrisers ,IPL ,55th league match ,Delhi ,Dinakaran ,
× RELATED இந்த ஆண்டில் ‘கூகுளில்’ அதிகம்...