×

பாசிப்பருப்பு புட்டு

தேவையானவை:

பாசிப்பருப்பு – 2 கப்,
வெல்லம் – பொடித்தது ½ கப்,
தேங்காய்த்துருவல் – ½ கப்,
ஏலக்காய் தூள் – 1 ஸ்பூன்.

செய்முறை:

பாசிப்பருப்பை நீரில் களைந்து, குடிநீரில் அரைமணி நேரம் ஊறவைத்து, நீரை வடித்து விட்டு கெட்டியாக அரைக்கவும். இட்லித் தட்டுகளில் அந்த மாவை ஊற்றி ஆவியில் வேகவைத்து, எடுத்து, சூடாக இருக்கும் போதே உதிர்த்து வைக்கவும். பொடித்த வெல்லத்தை சிறிது நீர்விட்டுக் கரைத்து கொதி வந்ததும் இறக்கி வடிகட்டவும். உதிர்த்த பாசிப்பருப்பில் பாகை சிறிது சிறிதாக விட்டுக் கிளறி, தேங்காய்த் துருவல், ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கவும். சுவையான, சத்தான ஸ்நாக்ஸ் தயார்.

The post பாசிப்பருப்பு புட்டு appeared first on Dinakaran.

Tags :
× RELATED வாட்டர் மெலோன் குல்ஃபி