×

கட்சி கைக்கு வந்தும் டென்ஷனில் இருக்கும் சேலம்காரரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘சேலம்காரர் வரவேற்பில் கோஷ்டிபூசல் களைகட்டியதை பற்றி சொல்லுங்க கேட்போம்…’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலை கட்சியே இப்ப சேலத்துக்காரர் கையில இருக்கு. இதனால, கட்சிக்காரங்க பல்வேறு ரூட் போட்டு அவரை நெருங்க முயற்சிக்கிறாங்க. இதற்கு காரணம் கட்சியில் மாவட்ட செயலாளர், மாநில பதவிகளை வாங்கதான். அப்படி வரும் கட்சிக்காரர்களை கடிந்து கொள்ளாமல் சிரித்தபடியே வரவேற்று, வெறும் கையோடு திருப்பி அனுப்புகிறாராம். இந்த மாதிரி நேரில் சந்தித்து ‘ஐஸ்’ வைப்பதில் வெயிலூர் மாவட்ட இலை கட்சிக்காரங்க கில்லாடிகளா இருக்காங்களாம். சமீபத்துல பக்கத்து மாநில மலைக்கோயிலுக்கு போயி சாமி தரிசனம் முடிச்சிட்டு திரும்பிய சேலத்துக்காரரை, ஒரு நிர்வாகி எல்லையிலேயே நின்னு, காணியில தொடங்கி பாக்கம்னு முடியுற கோயில் அறங்காவலர், அர்ச்சகர்கள் சகிதமா வரவேற்று அசத்தினாராம். இதுல சேலம்காரர் ரொம்பவே சந்தோஷப்பட்டாராம். அதேபோல, மாவட்ட எல்லையில் மற்றொரு உச்ச நிர்வாகி, தன் ஆதரவாளர்களை அழைத்து கொண்டு போய் பேண்டு வாத்தியம் முழங்க வரவேற்றாராம். இது தெரிஞ்ச மாநில அளவுல பொறுப்புல இருக்கிற அணி நிர்வாகி ஒருவர் தனியாக போய் சேலத்துக்காரரை சந்திச்சாராம். இப்படி கட்சி நிர்வாகிகள் கிட்ட ஒற்றுமை இல்லாதபோது கட்சியை எப்படி கட்டி காப்பது, தேர்தல்ல எப்படி ஜெயிப்பது, முதல்ல வேலூர் மாவட்ட நிர்வாகிகள் தங்கள் ஈகோவை விட்டுவிட்டு வந்து சேலம்காரரை சந்திக்கட்டும் என்று சேலம்காரருக்கு ரொம்பவே நெருக்கமா உள்ளவங்க பேசிக்கிறாங்க. இந்த பேச்சு எப்படியோ, சேலம்காரர் காதில் விழுந்ததாம். இந்த விஷயத்தை அப்புறம் விசாரிக்கிறேன் என்று கட்சிக்காரர்களிடம் சொன்னாராம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘திருச்சி வந்தா திருப்பம் இருக்கும் நினைச்சவருக்கு ஏமாற்றம் கிடைத்ததால் யார் கொந்தளித்து போனார்… ஏன் கோபித்துக் கொண்டார்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘நெற்களஞ்சியம் மாவட்டத்தில் சேலத்துக்காரர் அணி சார்பில் இலை கட்சியின் பொதுக்கூட்டம் பிரமாண்டமா நடக்க எல்லா ஏற்பாடுகளும் நடந்தது. இதில் பங்கேற்க சேலத்துக்காரர் ரொம்ப ஆர்வமுடன் வந்தாராம். அதில் பங்கேற்று பேசினாராம். ஆனால், பொதுக்கூட்டத்துல ஆவேசமாதான் பேசினாராம். இருந்தாலும் மனதில் கடும் கோபத்துடன் தான் இருந்தாராம். காரணம், தேனிக்காரரின் ஆதரவாளரான மாஜி அமைச்சர் வைத்தியானவர் சொந்த மாவட்டத்தில் பொதுக்கூட்டம் நடந்ததால் பெரிய அளவில் கூட்டம் கூட்ட வேண்டும். நம்ம செல்வாக்கை பார்த்து தேனிக்காரர் அசர வேண்டும் என்று நினைத்தாராம். இதற்காக, தன் அணியில் உள்ள மாவட்ட பொறுப்பாளர்களுக்கு சேலத்துக்காரர் கரன்சிய எக்கசக்கமா இறக்கினாங்க. அதை வைச்சு பிரியாணி மற்றும் குவார்ட்டர் கொடுக்க கட்சிக்காரங்களுக்கு கொடுக்க வாங்கினாங்களாம். இதனால நிறைய பேர் வருவாங்க என்று நினைச்சாங்களாம், அடிபொடிகள். ஆனால், நிகழ்ச்சி ஆரம்பிக்கும் வரை பொதுக்கூட்டத்தில் போடப்பட்டிருந்த சேர்கள் காலியாகத்தான் இருந்ததாம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தொண்டர்களே இல்லையாம்.
இதனால கை நீட்டி கரன்சி வாங்கிய கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சியில் உறைந்து போனாங்க. இதனால அதிர்ச்சி அடைந்த நிர்வாகிகள், கரன்சி வாங்கிட்டு காணாமல் போனவங்க பட்டியலை எடுத்து அவங்களை பிடித்து வர திட்டம் போட்டு இருக்காங்களாம். காரணம் கொடுத்த பணத்தை வாங்க முடிவு செய்து இருக்காங்களாம். பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்த இடத்தை பார்த்த சேலம்காரர் டென்ஷன் ஆயிட்டாராம். ஒரு மாவட்டத்துல ஒரு பொதுக்கூட்டத்தை கூட கூட்ட முடியல. கரன்சியை வாங்கிவிட்டு ஜூட் விட்டவர்களை லெப்ட் அண்டு ரைட் வாங்கிட வேண்டியது தான். இதனால் அதிர்ச்சியடைந்த மாஜி அமைச்சர்கள், சேலத்துக்காரர் பொதுக்கூட்ட மேடைக்கு வருவதற்குள் காலியா கிடந்த சேர்களை நிரப்ப விட வேண்டும் என முடிவுக்கு வந்தாங்க. இதனையடுத்து மனுநீதி சோழன் மற்றும் மன்னர் மாவட்ட மாஜி அமைச்சர்கள் தங்களது ஆதரவாளர்கள், தொண்டர்களுக்கு ‘வைட்டமின் ப’ கொடுத்து கூட்டத்தை வேனில் அழைத்து வந்தாங்களாம். பின்னர் ஓரளவுக்கு சேர்கள் நிரப்பியதாம். இதையடுத்து டெல்டாவை சேர்ந்த கட்சி நிர்வாகிகளை அழைத்து ெநற்களஞ்சியம் மாவட்டம் போல அடுத்த கூட்டம் இருக்கக் கூடாது என்று அவர்களை அழைத்து எச்சரித்தாராம். மேலும், டெல்டாவில் நடக்கும் கூட்டங்களில் எங்கே பார்த்தாலும் இலை கட்சி கூட்டமாக இருக்கணும். அதுலயும் மாஜி அமைச்சர்களை தான் சேலத்துக்காரர் கடுமையா எச்சரித்து அனுப்பினாராம்…’’ என்றார் விக்கியானந்தா.

The post கட்சி கைக்கு வந்தும் டென்ஷனில் இருக்கும் சேலம்காரரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : salemgarh ,tenshan ,wiki ,Goshdibusal ,salemgarr ,Peter ,Ipakala Salathukkar Gaila ,Salemkaran ,wiki Yananda ,
× RELATED எம்பி தேர்தல் நடக்க இருக்கும்...