×

கட்சியின் புதிய தலைவர் யார்? பாஜ தேசிய நிர்வாகிகள் வரும் 17ல் கூடுகின்றனர்

புதுடெல்லி: கட்சியின் புதிய தலைவரை முடிவு செய்வதற்கு முன்பாக, புதிய உறுப்பினர் சேர்க்கையை தொடங்கும் தினத்தை இறுதி செய்வதற்காக பாஜ தேசிய நிர்வாகிகள் கூட்டம் வரும் 17ம் தேதி டெல்லியில் நடக்க உள்ளது. ஆளும் பாஜ கட்சியின் தேசிய தலைவரான ஜே.பி.நட்டா, ஒன்றிய அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இதனால், நட்டாவுக்கு பதிலாக புதிய தலைவர் நியமிக்கப்பட உள்ளார். பொதுவாக பாஜவில் ஒருமித்த கருத்து அடிப்படையிலேயே புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவது வழக்கம்.

புதிய தலைவரை தேர்வு செய்யும் முன்பாக, புதிய உறுப்பினர் சேர்க்கை சுமார் 6 மாதத்திற்கு நடத்தப்படும். எனவே புதிய தலைவரை தேர்வு செய்யும் முன்பாக செயல் தலைவர் நியமிக்கப்படலாம் என கடந்த சில மாதங்களாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கட்சியின் புதிய உறுப்பினர் சேர்க்கை தொடங்குவது தொடர்பான இறுதி முடிவு எடுக்க பாஜ தேசிய நிர்வாகிகள் வரும் 17ம் தேதி டெல்லியில் கூடி ஆலோசிக்க உள்ளனர். இதில், தேசிய நிர்வாகிகள் தவிர, மாநில கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுச் செயலாளர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

The post கட்சியின் புதிய தலைவர் யார்? பாஜ தேசிய நிர்வாகிகள் வரும் 17ல் கூடுகின்றனர் appeared first on Dinakaran.

Tags : BJP National Executive ,NEW DELHI ,BJP ,Delhi ,JP Natta ,BJP National ,
× RELATED எடப்பாடி முன்னிலையில் மைத்ரேயன் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்