×

140 கோடி இந்தியர்களின் கூட்டணியே I.N.D.I.A. கூட்டணி… கட்சிக்கான அரசியல் அல்ல; இது இந்தியாவுக்கான கூட்டணி: அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி

மும்பை: கட்சிக்கான அரசியல் அல்ல, இது இந்தியாவுக்கான கூட்டணி என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். பாட்னா, பெங்களூருவை தொடர்ந்து இந்தியா கூட்டணியின் 3-வது கட்ட ஆலோசனை கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 28 கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் பங்கேற்றனர். நாடாளுமன்ற தேர்தலை ஒன்றாக இணைந்து சந்திக்க இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரபட்டது.

ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் இந்தியா கூட்டணி தலைவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்; கட்சிக்கான அரசியல் அல்ல, இது இந்தியாவுக்கான கூட்டணி என்றார். தொழிலதிபர்கள் நலனுக்காகவே மோடி தலைமையிலான பாஜக அரசு பாடுபட்டு வருகிறது. 140 கோடி இந்தியர்களின் கூட்டணியே I.N.D.I.A. கூட்டணி என்று கூறினார். ஊழலில் திளைக்கும் மோடி அரசு, ஆணவத்துடன் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டியுள்ளார்.

The post 140 கோடி இந்தியர்களின் கூட்டணியே I.N.D.I.A. கூட்டணி… கட்சிக்கான அரசியல் அல்ல; இது இந்தியாவுக்கான கூட்டணி: அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி appeared first on Dinakaran.

Tags : INDIA alliance ,Indians… ,India ,Arvind Kejriwal ,Mumbai ,Delhi ,Chief Minister ,Patna, Bengaluru ,Indians ,
× RELATED விண்வெளியில் இந்தியாவின் புதிய பாய்ச்சல்: நாளை விண்ணில் பாய்கிறது PSLV-C62!