×

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜ போட்டியிடும் 10 தொகுதிகள் தேர்வு: நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ பேட்டி

நெல்லை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜ போட்டியிட 10 தொகுதிகள் தேர்வு செய்து தேர்தல் பணிகள் துவங்கப்பட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ தெரிவித்தார். பாஜ மாநில துணைத்தலைவரும், எம்எல்ஏவுமான நயினார் நாகேந்திரன் நெல்லை பாஜ அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக மக்களின் உரிமைகளுக்காக பாஜ எப்போதும் குரல் கொடுக்கும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் 350 இடங்களுக்கு மேல் பாஜ வெற்றி பெற்று மீண்டும் மோடி பிரதமர் ஆவார். மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி மாநில அரசுகளிடம் கலந்து பேசாமல் எந்த முடிவும் எடுக்கப்படமாட்டது என மத்திய நீர்ப்பாசனதுறை கூறியுள்ளது. ஒன்றிய அரசு தமிழக மக்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 10 தொகுதிகளை தேர்வு செய்து தேர்தல் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் பொதுவானதுதான் பொது சிவில் சட்டம். இதனால் பாஜவுக்கு பாதிப்பு இல்லை. தமிழகத்தில் பிரதமர் மோடி போட்டியிட வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜ போட்டியிடும் 10 தொகுதிகள் தேர்வு: நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ பேட்டி appeared first on Dinakaran.

Tags : BJP ,Nayanar Nagendran ,MLA ,Nellai ,
× RELATED என்னமோ நடக்குது.. மர்மமா இருக்குது…