×

நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட 913 வாக்குறுதிகளில் கடந்த 3 ஆண்டில் 583 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தகவல்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் கடந்த 3 ஆண்டுகளில் 583 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் நேற்று ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர் ரியாகா கிருஷ்ணய்யா எழுப்பிய கேள்விகளுக்கு நாடாளுமன்ற விவகாரங்கள்துறை இணையமைச்சர் எல்.முருகன் பதிலளித்தார். அப்போது, “கடந்த 3 ஆண்டுகளில் நாடாளுமன்ற 253வது அமர்வில் 120 வாக்குறுதிகள், 254வது அமர்வில் 105 வாக்குறுதிகள், 255வது அமர்வில் 25, 256ல் 221, 257ல் 70, 258வது அமர்வில் 95, 259ல் 118, 260ல் 99 வாக்குறுதிகள், 261வது சிறப்பு அமர்வில் வாக்குறுதிகள் இல்லை மற்றும் 262வது அமர்வில் 60 வாக்குறுதிகள் என மொத்தம் 913 வாக்குறுதிகள் அமைச்சர்களால் வழங்கப்பட்டன.

இந்த உறுதிமொழிகளில் 583 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அரசு கொள்கைகளில் மாற்றம் மற்றும் திருத்தங்கள் காரணமாக 330 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளன. நாடாளுமன்ற விவகார அமைச்சகம் ஆன்லைன் அஷ்யூரன்ஸ் மானிட்டரிங் சிஸ்டம் என்ற மென்பொருளை உருவாக்கி அனைத்து அமைச்சகங்களுக்கும் பயனாளர் முகவரி வழங்கப்பட்டுள்ளது. திட்டங்களை நிறைவேற்றுவது குறித்து அனைத்து அமைச்சகங்கள், துறைகளுக்கு அவ்வப்போது நினைவூட்டப்படுகிறது ” என்று தெரிவித்தார்.

The post நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட 913 வாக்குறுதிகளில் கடந்த 3 ஆண்டில் 583 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Parliament ,Union Minister ,L. Murugan ,New Delhi ,Minister of State for Parliamentary Affairs ,YSR Congress ,Riyaka Krishnaiah ,Rajya ,Sabha ,Dinakaran ,
× RELATED பாஜ, பாமக குறித்து பேச திருமாவளவனுக்கு...