×

பாமகவின் இரட்டை வேடம் தந்தை எதிர்ப்பு ; மகன் ஆதரவு

பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், தமிழ்நாட்டுக்கு தேவையான அவசியமான, அத்தியாவசியமான வேலைகளுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. பட்ஜெட்டில் நிறைய பிரச்னைகள் உள்ளது. வரி நாம் கூடுதலாக கொடுத்திருக்கிறோம். வரி குறைவாக செலுத்திய மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கி இருக்கிறார்கள். இப்படியான பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது’ என்று எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.

அவரது மகன் பாமக தலைவர் அன்புமணி அளித்துள்ள பேட்டியில், ‘எல்லாமே ஒன்றிய அரசு கொடுக்க வேண்டும் என கூறுவது ஏற்புடையது அல்ல’ என்று பாஜ அரசுக்கு வக்காலத்து வாங்கி உள்ளார். சில நாட்களுக்கு முன் பேட்டியளித்த அன்புமணி, தமிழ்நாடு என்ற பெயர் இடம் பெற வேண்டும் என்றால் 25 எம்பிக்களை தந்து இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார். கூட்டணி வைப்பதில் ஏற்பட்ட பிரச்னை முதலே பாஜவுக்கு எதிராக ராமதாஸ் பேசி வருவதும், அன்புமணி ஆதரவாக பேசி வருவதும் பாமகவின் இரட்டை நிலைப்பாட்டை வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

The post பாமகவின் இரட்டை வேடம் தந்தை எதிர்ப்பு ; மகன் ஆதரவு appeared first on Dinakaran.

Tags : Pamaga ,BAMA ,Ramadoss ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED மருத்துவக் கழிவுகளை பொது இடங்களில்...