×

நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு ரூ.500 ஊக்கத்தொகை வழங்க அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் 2023-24ம் ஆண்டுக்கான நெல் கொள்முதல், அக்டோபர் 1ம் தேதிக்கு பதிலாக செப்டம்பர் 1ம்தேதியே தொடங்கும் என்று அரசு அறிவித்திருக்கிறது. இது, வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில் நெல்லுக்கு அறிவிக்கப்பட்டுள்ள கொள்முதல் விலை போதுமானதல்ல. ஒரு குவிண்டால் நெல்லுக்கான குறைந்த அளவு ஆதரவு விலையாக சன்ன ரகத்திற்கு ரூ.2203, சாதாரண ரகத்திற்கு ரூ.2183 என ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது.

அத்துடன் சாதாரண நெல்லுக்கு ரூ.82, சன்னரக நெல்லுக்கு ரூ.107 வீதம் ஊக்கத் தொகை சேர்த்து சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,265, சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,310 வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. இது எந்த வகையிலும் போதுமானது அல்ல. ஒன்றிய அரசு ஒரு குவிண்டால் நெல்லுக்கு கொள்முதல் விலையாக ரூ.2203 மட்டுமே அறிவித்துள்ள நிலையில், மீதமுள்ள 797 ரூபாயை தமிழ்நாடு அரசு ஊக்கத் தொகையாக வழங்க வேண்டும். அவ்வளவு தொகை வழங்க வாய்ப்பில்லை என்றால் குறைந்த அளவு குவிண்டாலுக்கு 500 ரூபாயாவது ஊக்கத் தொகையாக வழங்க அரசு முன்வர வேண்டும்.

The post நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு ரூ.500 ஊக்கத்தொகை வழங்க அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Anbumani ,Chennai ,PAMC ,President ,Tamil Nadu ,
× RELATED தவறான, உண்மைக்குப் புறம்பான செய்திகளை...